17 ஆண்டுகளுக்கு பின்.. மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு.. பெருமகிழ்ச்சியில் முதல்வர் விஜய்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: 17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைவதாக முதல்வர் விஜய் பதிவிட்டுள்ளார். தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் கோயில் என்று கூறியுள்ள விஜய், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

17 ஆண்டுகளுக்கு பின் மதுரை மீனாட்சியம்மன் கோயிலும் குடமுழுக்கு விழா நாளை காலை நடைபெறுகிறது. இதற்காக பல்வேறு துறைகளும் சேர்ந்து தீவிர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vijay

இதற்காக பிரத்யேக பேருந்துகள், சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே குடமுழுக்கை பார்க்க மதுரையில் லட்சக்கணக்கான மக்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். இதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதற்காக 51 இடங்களில் பிரம்மாண்ட எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளம. காலை 7.40 முதல் 8.10 மணிக்குள் குடமுழுக்கு நடக்கவுள்ளது.

அப்போது பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட உள்ளது. பொது தரிசனம் காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பக்தர்கள் பாதையில் செல்வதற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தண்ணீர், மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த விழாவில் அமைச்சர் ரமேஷ், சிடிஆர் நிர்மல்குமார் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

இந்த நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு தொடர்பாக முதல்வர் விஜய் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், தமிழர்களின் ஆன்மிகம், கலை, பண்பாடு, கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலையின் பெருமைகளை நூற்றாண்டுகளைக் கடந்து பறைசாற்றி நிற்கும் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு சிறப்புடன் நடைபெறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழர் பண்பாட்டின் உன்னத அடையாளத்தை உலகிற்கு உணர்த்தும் வகையிலும், நம் மண்ணின் ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பெருமையை எடுத்துரைக்கும் வகையிலும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெறும் இந்நன்னாளில், இறைவனின் திருவருள் அனைவரது வாழ்விலும் நிறைந்து, நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெருகட்டும்!

நமது தொன்மையான திருக்கோயில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாத்து, ஆன்மிக மற்றும் பண்பாட்டுப் பெருமையை வருங்காலத் தலைமுறைகளுக்கும் எடுத்துச் செல்வோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குடமுழுக்கு விழாவில் பங்கேற்க விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா கூறி இருந்தார். ஆனால் விஜய் லண்டனில் இருந்து இன்று இரவு தான் புறப்படுவதால், பங்கேற்க வாய்ப்பில்லை என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+