Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்யின் தவெகவில் இணைந்த இயக்குநர் வெற்றிமாறன்? தீயாக பரவும் போட்டோ! உண்மை என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாநிலம் முழுக்க அக்கட்சியினர் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதன்படி மதுரையிலும் தவெக நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கிடையே மதுரையில் நடந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் தவெகவில் இணைந்தாக தகவல் பரவி வருகிறது. இது உண்மை தானா! இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக உள்ள விஜய், அரசியலுக்கு வருவார் எனக் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் பரவி வந்தது. இதற்கிடையே கடந்தாண்டு விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார்.

vetrimaaran vijay tvk

இப்போது ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் படம் ஒன்றில் நடித்து வரும் சூழலில், அத்துடன் சினிமாவுக்கு முழுமையாக குட்பை சொல்லிவிட்டு விஜய் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார். 2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு, அவர் மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தவெக விஜய்:

இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க நாளையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். தவெகவின் கொள்கை தலைவர்களாகப் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அஞ்சலையம்மாள், வேலு நாச்சியார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சிலைகளை விஜய் திறந்து வைத்தார். மேலும், அச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெகவின் 2ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. அதன்படி மதுரையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. மதுரை வடக்கு மாவட்டச் செயலாளராகச் சமீபத்தில் தான் விஜய் அன்பன் என்பவர் நியமிக்கப்பட்ட சூழலில் அழகர் கோவிலில் அவர் மாட்டு வண்டி பந்தயத்தை நடத்தினார். சிறிய மற்றும் பெரிய மாடுகள் என இரு பிரிவுகளாகப் பந்தயம் நடத்தப்பட்ட சூழலில் வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.


வெற்றிமாறன்:

இந்த நிகழ்ச்சியில் தான் இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்று, போட்டியில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தினார். மேலும், வெற்றியாளர்களுக்கும் பரிசளித்தார். அப்போது தவெக நிர்வாகிகள் இயக்குநர் வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். தவெக நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பங்கேற்றது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேநேரம் இந்த போட்டோவை வைத்தே பலரும் வெற்றிமாறன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துவிட்டதாகத் தகவல்களைப் பரப்பினர்.

ஆனால், இந்த தகவலில் உண்மை இல்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது. மாட்டுவண்டிப் பந்தயத்தில் சிறப்பு விருந்தினராக மட்டுமே இயக்குநர் வெற்றிமாறன் பங்கேற்றுள்ளார். தனது அடுத்த பட வேலைகளுக்காக வெற்றிமாறன் மதுரைக்குச் சென்ற நிலையில், அப்போது இந்த பந்தயம் நடந்ததால் இதில் பங்கேற்றுள்ளார். அதேநேரம் அவர் கட்சியில் இணைந்ததாகச் சொல்வதில் உண்மை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விஜய்:

முன்னதாக விஜய் இரண்டாம் ஆண்டு தொடக்க நாளான இன்று விஜய் தனது ட்விட்டர் பக்ககத்தில், "நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.

மேலும், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலர் ஆகியவற்றுடன் நம் தலைமை நிலையச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஐம்பெரும் தலைவர்களான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினேன். வெற்றி நிச்சயம்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+