70 கோடியில் புதிய நூலகம்.. அதென்ன மதுரையில்?.. ஸ்டாலின் யோசித்த காரணங்கள் இவைதான்!
மதுரை: சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கருணாநிதி நினைவு நூலகம் ரூ 70 கோடி செலவில் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது என்ன மதுரையில் நூலகம் என நீங்கள் கேட்பது புரிகிறது.
Recommended Video
மதுரையானது தமிழகத்தின் மிகப் பெரிய நகரமாகும். வைகை ஆறு பாயும் பாண்டிய மண்ணில் மீனாட்சி அம்மன் கோயில், நாயகர் மஹால் அரண்மனை உள்ளிட்டவை உள்ளன.
பாண்டியர்கள் ஆண்ட இந்த மதுரையில் ரூ 70 கோடி செலவில் நூலகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகரங்கள்
எத்தனையோ மாவட்டங்கள், நகரங்கள் இருக்க மதுரையில் ஏன் நூலகம் அமைய போகிறது என்றால் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பழமையான விஷயங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. அது போல் மதுரை மாவட்டத்திற்கு பக்கத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் தான் கீழடி அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெறுகின்றன.

20 கி.மீ. தூரம்
இது மதுரையிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ளது. கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் போது சங்ககால பொருட்கள் கிடைக்கப்படுவதால் மதுரையில் அமைய பெறும் நூலகத்தில் அதுகுறித்த தகவல்கள் இடம் பெறுவது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

மதுரை
யாழ்ப்பாணம் நூலகத்திற்கு அடுத்து மதுரையில் அமைய பெறும் இந்த நூலகம் அதிக அளவில் புகழ் பெற வாய்ப்பிருக்கிறது. சென்னை அடையாற்றில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை போல் மிகவும் பிரம்மாண்டமாக அமையவுள்ள இந்த நூலகம் தென் மாவட்டத்தின் மிகப் பெரிய அறிவுக் களஞ்சியமாக மாறும்.

வாய்ப்புகள்
மதுரையை தமிழகத்தின் இன்னொரு தலைநகராக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை இன்றளவும் உள்ளது. ஒரு வேளை அவ்வாறு மாற்றப்பட்டால் இந்த நூலகம் மூலம் தென் மாவட்ட மக்கள் பயனடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டும் மதுரை தென் மாவட்டங்களின் மையப்பகுதி என்பதாலும் இங்கு நூலகம் அமைக்க திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது.
-
Maridhas: மாரிதாஸ் கைது ஏன்? ஆதவ் உறவினர் ஜான் பிரிட்டோ குறித்து பேசியதுதான் காரணமா? அதிமுக நறுக்! -
Maridhas Arrest: யூடியூபர் மாரிதாஸ் கைது! மதுரை வீட்டில் குவிந்த சைபர் கிரைம் போலீஸார் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications