நொடிக்குநொடி ட்விஸ்ட்! ஏக்நாத் ஷிண்டேவுடன் 46 எம்எல்ஏக்கள்! மகாராஷ்டிராவில் கவிழும் சிவசேனா ஆட்சி?
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஏக்நாத் ஷிண்டேவுடன் 46 எம்எல்ஏக்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில் மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழும் நிலையில் உள்ளது.
Recommended Video
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 2019ல் தேர்தல் நடந்தது. இதில் பாஜக, சிவசேனா கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இதில் பாஜகவுக்கு 105 இடங்களில் வென்றது.
சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 51 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வென்றது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 29 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றன. ஒருவர் இறந்த நிலையில் 2 பேர் சிறையில் உள்ளனர்.

சிவசேனா கூட்டணி ஆட்சி
2019 தேர்தல்ல முடிவுக்கு பிறகு பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஒன்றாக இணைந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்தனர். சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வராக உள்ளார். இந்த கூட்டணிக்கு சுயேச்சை எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதனால் பாஜக எதிர்க்கட்சியாக செயல்பட துவங்கியது. 2019 தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட ஆட்சி அமைக்க முடியவில்லையே என்ற வருத்தம் பாஜக தலைவர்கள் இடையே இருந்தது.

ராஜ்யசபா, எம்எல்சி தேர்தல் மோதல்
இந்நிலையில் தான் பாஜக-சிவசேனா இடையே சமீப காலமாக வார்த்தை போர் நீடித்தது. மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. இந்நிலையில் ஜூன் 10ல் நடந்த ராஜ்யசபா மற்றும் நேற்று முன்தினம் நடந்த எம்எல்சி தேர்தல் ஆகியவற்றிலும் பாஜகவுக்கு போட்டியாக ஆளும் கூட்டணி சார்பில் கூடுதலாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். இந்த 2 தேர்தலிலும் பாஜகவின் கையே ஓங்கியது. அதாவது கூடுதலாக நிறுத்தப்பட்ட பாஜக வேட்பாளர்கள் தான் வெற்றி பெற்றனர். இது ஆளும் சிவசேனா கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

அதிருப்தி எம்எல்ஏக்கள்
இதன் தொடர்ச்சியாக தான் கூட்டணி ஆட்சி மீது சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவுடன் அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைமறைவாகினர். முதலில் குஜராத் சொகுசு ஓட்டலில் எம்எல்ஏக்களுடன் தங்கிய அவர் தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்கியுள்ளார். முதலில் ஏக்நாத் ஷிண்டேவுடன் 30 எம்எல்ஏக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது பிறகு 33 எனவும், தற்போது 36 எனவும் அதிகரித்துள்ளது.

46 எம்எல்ஏக்கள் ஆதரவு
இதுகுறித்து ஏக்நாத் ஷிண்டே கூறுகையில், எனக்கு ‛‛என்னுடன் 46 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதில் 40 பேர் கட்சி எம்எல்ஏக்கள். 6 பேர் சுயேச்சகைள் ஆவார்கள். கட்சி மாறும் திட்டம் இல்லை. சிவசேனாவை விட்டு நான் நான் எங்கும் செல்ல மட்டேன். பால்தாக்கரேவின் சித்தாந்தத்தை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறேன்'' என்றார்.

ஆட்சி கவிழ்கிறதா?
முன்னதாக முதல்வர் உத்தவ் தாக்கரே, குஜராத்தில் இருந்த ஏக்நாத் ஷிண்டேவுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது திரும்பி வரும்படி உத்தவ் தாக்கரே கூறியதை ஏக்நாத் ஷிண்டே மறுத்துவிட்டார். இதையடுத்து தான் அவர் எம்எல்ஏக்களுடன் அசாம் கவுகாத்திக்கு மாறியுள்ளார். இந்நிலையில் தான் மகாராஷ்டிரா அரசு கலைக்கப்படும் நிலை உள்ளதாக சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். இன்று மதியம் 1 மணிக்கு முதல்வர் உத்தவ் தாக்கரேவின் தலைமையில் நடைபெற உள்ளத அமைச்சரவை கூட்டத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications