மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அங்க கூட பாதுகாப்பில்லையா? பாத்ரூமில் பலாத்காரம்! அலறிய சிறுமி! ஆளும் மகா அரசுக்கு மீண்டும் சிக்கல்!

Google Oneindia Tamil News

மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சதுரங்க நகர்வுகளுக்கிடையே புனேவில் ஒரு கொடூரமான சம்பவம் நடைபெற்றுள்ளதையடுத்து ஆளும் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன.

இந்தியாவில் 2021ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்காண்டு தொடர்ந்து அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 2021ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 30 ஆயிரம் வழக்குகள் பெண்களுக்கு எதிரான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கூட்டத்திற்கு வராத திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர்.. காரணம் என்ன? - ஜெயக்குமார் பரபர விளக்கம்! கூட்டத்திற்கு வராத திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட 5 பேர்.. காரணம் என்ன? - ஜெயக்குமார் பரபர விளக்கம்!

நாட்டிலேயே அதிக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் முதலிடத்தில் உத்தரப் பிரதேசமும் இரண்டாவது இடத்தில் டெல்லியும் நான்காவது இடத்தில் மகாராஷ்டிராவும் உள்ளது.

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் ஒரே ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவின் வர்த்தகத் தலைநகராக கருதப்படும் மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் நடைபெற்று வரும் அரசியல் பரபரப்புகளுக்கிடையே புனேவில் ஒரு கொடூரமான வழக்கு பதிவாகியுள்ளது.

13 வயது சிறுமி

13 வயது சிறுமி

புனேவில் புறநகர்ப் பகுதியில் உள்ள 12 வயது சிறுமி ஒரு பொது கழிப்பறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவம் தான் தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளார். சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டவர் மாலை நேரத்தில் பொது கழிப்பறைக்குச் சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் மாமா, பொதுக் கழிப்பறைக்குள் சிறுமி சென்ற போது அந்த நபர் நுழைவதைப் பார்த்து, எச்சரிக்கை எழுப்பியதை அடுத்து இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அவரைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்கட்சிகள் கண்டனம்

எதிர்கட்சிகள் கண்டனம்

மகராஷ்டிராவில் ஆளும் சிவசேனா எம்எல்ஏக்கள் கட்சி தாவல் உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கித் தவித்து வரும் நிலையில், எந்நேரமும் அரசு கவிழும் நிலையில் உள்ளது. இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் 12 வயது சிறுமி ஒரு பொது கழிப்பறையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ள சம்பவத்தை கையில் எடுத்து, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மகாராஷ்டிர அரசைக் கடுமையாக தாக்கி வருகின்றன.

English summary
Opposition parties have raised the battle flag against the ruling government in the wake of a tragic incident in Pune amid heated political chess moves in the state of Maharashtra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X