மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

“சரத் பவார் நரகத்துக்கு போவார்” - கொந்தளித்த கட்சியினர்.. ஃபேஸ்புக்கில் பதிவிட்ட நடிகை கைது!

Google Oneindia Tamil News

மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்து தெரிவித்த மராத்தி நடிகை கேதகி சிதாலே கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத் பவார் பற்றிய கேதகி சிதாலேவின் ஃபேஸ்புக் பதிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அக்கட்சியினர் பல இடங்களில் போலீசிலும் புகார் அளித்தனர்.

6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன? 6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?

இதையடுத்து, சரத் பவார் குறித்து அவதூறு பரப்பியதாக தானே குற்றப்பிரிவு போலீசார் நடிகை கேதகி சிதாலேயை கைது செய்தனர்.

மராத்தி நடிகை

மராத்தி நடிகை

நடிகை கேதகி சித்தாலே, இந்தி மற்றும் மராத்தி டிவி தொடர்களில் நடித்து வருபவர். இவர் கடந்த ஆண்டு சத்ரபதி சிவாஜியை சமூக வலைதளத்தில் மேற்கோள் காட்டி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு எதிராக சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய நிலையில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சரத் பவார் பற்றி பதிவு

சரத் பவார் பற்றி பதிவு

மராத்தி நடிகை கேதகி சிதாலே வேறு நபர் எழுதியது எனக் கூறி ஃபேஸ்புக்கில் சரத்பவார் குறித்து ஒரு கருத்தை பதிவு செய்தார். அவரது பதிவில், "நீங்கள் ஊழல்வாதி.. நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள். நரகம் உங்களுக்கு காத்து கொண்டு இருக்கிறத" எனத் தெரிவித்திருந்தார்.

கேதகி சிதாலேவின் இந்த ஃபேஸ்புக் பதிவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக தானே, புனே உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர்.

தொண்டர்கள் புகார்

தொண்டர்கள் புகார்


மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில், நடிகை கேதகி சிதாலேவுக்கு எதிராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.

சரத்பவார் குறித்து அவதூறு பரப்பிய நடிகையை கைது செய்ய வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் புனே மாவட்ட தலைவர் பிரசாந்த் ஜக்தாப் உள்ளிட்ட பலர் வலியுறுத்தினர்.

பாஜகவிடம் கற்றிருப்பார்

பாஜகவிடம் கற்றிருப்பார்

தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கிளைட் கிரஸ்டோ கூறுகையில், சரத்பவாருக்கு எதிராக அவதூறு பரப்பி மலிவு விளம்பரத்தை பெற முடியும் என்பதை மராட்டிய பா.ஜ.கவிடம் இருந்து இந்த நடிகை கற்றிருப்பார் என விமர்சித்தார்.

இதுதொடர்பாக மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறுகையில், சரத் பவாருடன் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். கொள்கைகளை கொள்கைகளை கொண்டுதான் போராடவேண்டும். இது போன்று அவதூறாகப் பதிவிடக்கூடாது" எனத் தெரிவித்துள்ளார்.

நடிகை கைது

நடிகை கைது


இந்நிலையில் போலீசார் நடிகை கேதகி சிதாலேவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் கூடிய தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கேதகி மீது மை வீசித்தாக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

அதைத்தொடர்ந்து, சரத்பவார் குறித்து அவதூறு பரப்பியதாக தானே குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகை கேதகி சிதாலேயை கைது செய்தனர்.

English summary
Marathi actress Ketaki Chitale booked and arrested for obnoxious facebook post on NCP leader Sharad Pawar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X