போதை ஏறிப் போச்சு! போதைப் பொருள் டான்களுடன் கனெக்சன்! போலீசிடம் தொக்காய் சிக்கிய பிரபல நடிகை! ஷாக்!
மும்பை : போதைப் பொருள் வழக்கில் அடுத்தடுத்து பல்வேறு நடிகை நடிகர்கள் சிக்கி வரும் நிலையில் தற்போது போதை பொருள் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக மேலும் ஒரு நடிகை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திரை உலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட ஒரு சம்பவம் பாலிவுட் திரையுலகம் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அவர் போதை பொருள் பழக்கத்தில் இருந்தார் என கூறியதை எடுத்து இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது.

போதைப் பொருள்
சுஷாந்த் தற்கொலை வழக்கில் அவரது காதலி ரியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்ட நிலையில் பாலிவுட் திரையுலகில் பல பிரபலங்கள் போதை பொருட்கள் பிடியில் சிக்கி இருப்பதாகவும் சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதை அடுத்து நடிகைகள் தீபிகா படுகோன், ராகுல் ப்ரீத் சிங் ,சாரா அளிலிக்கான், ஸ்ரத்தா கபூர், சார்மி, ராகினி திரிவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோரிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

நடிகைகளுக்கு தொடர்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட தென்னிந்திய திரையுலகில் நட்சத்திர நடிகையான சஞ்சனா கல்ராணி கர்நாடக தலைநகர் பெங்களூருவில் போதை பொருள் வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இவர் தெலுங்கு, கன்னடம் மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ள சஞ்சனா தமிழில் ஒரு காதல் செய்வீர் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் தமிழ் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு நடிகை
கடந்த சில நாட்களாக இந்த விவகாரம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு நடிகை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. கன்னடத்தில் ரிங் மாஸ்டர் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ஸ்வேதா குமாரி மும்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதைப் பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வேதா குமாரி
ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்வேதா குமாரி மெஃபேட்ரோன் என்ற போதைப்பொருள் விற்கும் கும்பல் தொடர்பில் இருந்ததாகவும் இதை எடுத்து அவரை கைது செய்துள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கூறியுள்ளனர் இதன் காரணமாக திரையுலகில் மீண்டும் போதை பொருள் விவகாரம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications