மண்டபத்திற்கு மாப்பிள்ளை வர கொஞ்சம் லேட்.. மணமகளை யார் கையில் கொடுத்தார்கள் பாருங்க.. ஹையோ ஹையோ
மும்பை: மகாராஷ்டிராவில் நண்பர்களுடன் மதுபானம் குடித்து போதையில் சரியான நேரத்துக்கு திருமண மண்டபத்துக்கு மணமகன் மற்றும் குடும்பத்தினர் செல்லாததால் மணப்பெண்ணுக்கு அவரது உறவினருடன் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவில் திருமணத்தின்போது பல்வேறு வினோத சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு படங்களும் வெளியாகி உள்ளன.
சினிமா பாணியில் இறுதி நேரத்தில் திருமணங்கள் தடைப்பட்டுள்ளதோடு, மணமகன்-மணப்பெண்ணுக்கு உறவினர்களுடன் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன. அந்த வகையில் தற்போது வினோத திருமணம் நடந்துள்ளது அதுபற்றிய விபரம் வருமாறு:
.

திருமணம் முடிவு
மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தை சேர்ந்த வாலிபருக்கும், இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். இவர்களுக்கான திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. மணமகள், மணமகன் வீட்டார் சார்பில் உறவினர்களுக்கு அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டது. திருமணத்தையொட்டி முன்கூட்டியே மண்டத்துக்கு பெண்ணின் குடும்பத்தினர் வந்து காத்திருந்தனர்.

4 மணிநேரம் தாமதம்
முகூர்த்த நேரம் நெருங்கியும் மாப்பிள்ளை வீட்டில் இருந்து யாரும் வரவில்லை. செல்போனில் அழைத்தும் சரியாக பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மணப்பெண்ணின் குடும்பத்தினர் பதறினர். முகூர்த்த நேரமும் முடிந்து போனது. முகூர்த்த நேரம் முடிந்து 4 மணிநேரம் கழித்து மணமகனின் வீட்டார் திருமண மண்டபத்துக்கு வந்தனர்.

குடிபோதையில் கும்மாளம்
அப்போது தான் திருமணத்துக்கு முந்தைய நாள் நண்பர்களுடன் சேர்ந்து மணமகன் அதிகமாக மதுபானம் குடித்ததாலும், போதையில் ஆடிப்பாடி நேரத்தை வீணடித்ததால் அவர்களால் சரியான நேரத்துக்கு வரமுடியவில்லை என்பதும் தெரியவந்தது. இதை கேட்டு கோபமடைந்த மணப்பெண் வீட்டினர் திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தனர்.

இன்னொருவருடன் திருமணம்
மேலும், தங்கள் பெண்ணுக்கு உறவுக்கார பையனுடன் திருமணம் நடத்தியதாக அவர்கள் தெரிவித்தனர். இதை கேட்டு மணமகனின் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி மணப்பெண்ணின் தாய் கூறுகையில், ‛‛மணமகன், அவரது நண்பர்கள் குடிபோதையில் இருந்ததால் 4 மணிநேரம் தாமதமாக வந்தனர். இதனால் எனது மகளை எங்கள் உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தோம்'' என்றார்.












Click it and Unblock the Notifications