Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவில் அமைச்சராகும் தமிழர்? கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு அடிக்கும் ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிட்ட கேப்டன் தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார். கேப்டன் தமிழ்ச்செல்வன் 3வது முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ளார். அவர் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மிகவும் நெருக்கம் என்பதால் இந்த முறை மகாராஷ்டிர கூட்டணி அரசில் கேப்டன் தமிழ்ச்செல்வனுக்கு அமைச்சர் பதவி கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சயான் கோலிவாடா தொகுதி, காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் நேரடியாக மோதிய தொகுதிகளில் ஒன்று. இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட கணேஷ் குமார் யாதவும், பாஜக சார்பில் போட்டியிடும் தமிழ்ச் செல்வனும் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். மகாராஷ்டிரா தேர்தல் களத்தில் இரு தமிழர்கள் மோதிக் கொள்வதால், மகாராஷ்டிரா வாழ் தமிழர்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

election results 2024 maharashtra assembly election 2024 maharashtra 2024

கேப்டன் தமிழ்ச்செல்வன்: சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பாக 2 முறை எம்.எல்.ஏ-வாக இருப்பவர் தமிழ்ச்செல்வன். மூன்றாவது முறையாக போட்டியிட்டு, தற்போது வெற்றி பெற்றுள்ளார். தமிழ்ச்செல்வனின் சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி கிராமம். இவரது தாய், தம்பி உள்ளிட்டோர் தற்போதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் உள்ளனர்.

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் துபாயில் வேலைக்குச் சேர்த்து விடுவதாகக் கூறி, ஏஜென்ட் ஒருவர், தமிழ்ச்செல்வனை மும்பைக்கு அழைத்துச் சென்று, விமான நிலையத்தில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். துபாய்க்குச் செல்வதாக ஊரில் கூறிவிட்டு வந்து ஏமாந்து போய் மீண்டும் வெறுங்கையுடன் திரும்புவதை தமிழ்ச்செல்வன் விரும்பவில்லை. மும்பையிலேயே தங்கிவிட்டார். தமிழ்ச்செல்வன் மும்பை ரயில் நிலையங்களில் கூலித் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் படிப்படியாக உயர்ந்து, தாராவி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மக்களுக்கு உதவத் தொடங்கினார்.

உதவி செய்யும் குணம்: மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது காயமடைந்து உயிருக்கு போராடிய 50 பேரை, கைவண்டியில் படுக்க வைத்து, மருத்துவமனையில் சேர்த்த இவரது சேவைக்காக, மகாராஷ்டிர மாநில ஆளுநர் பாராட்டையும், விருதையும் பெற்றுள்ளார். இவரது உதவி செய்யும் குணத்துக்காக மும்பை வாழ் தமிழர்கள் இவரை கேப்டன்' தமிழ்ச்செல்வன் என்று அழைக்கிறார்கள்.

உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவர் பதவியில் இருந்த தமிழ்செல்வன், மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராகவும் பணியாற்றி உள்ளார். பின்னர் பாஜகவில் இணைந்த தமிழ்ச்செல்வனுக்கு 2014 சட்டசபை தேர்தலில் சயான் - கோலிவாடா தொகுதி சீட் வழங்கியது பாஜக. அதில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ ஆனார் தமிழ்ச்செல்வன்.

பாஜக எம்.எல்.ஏ: மீண்டும் 2019ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் சயான் - கோலிவாடா தொகுதியில் வென்று பாஜக எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார் தமிழ்ச்செல்வன். மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டசபை உறுப்பினராக இருக்கும் ஒரே தமிழர் தமிழ்ச்செல்வன் தான். இந்நிலையில், தற்போது ஹாட்ரிக் வெற்றி பெற்று இருக்கிறார் கேப்டன் தமிழ்ச்செல்வன். காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் குமாரை விட 8,895 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார் கேப்டன் தமிழ்ச்செல்வன்.

வாக்கு எண்ணிக்கை முடிவில், பாஜக வேட்பாளர் தமிழ்ச்செல்வன், 73,429 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் கணேஷ் குமார் யாதவ் 65,534 வாக்குகளும் பெற்றுள்ளனர். கேப்டன் தமிழ்ச்செல்வன், 7,895 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஹாட்ரிக் வெற்றி: சயான் கோலிவாடா தொகுதியில் 3வது முறையாக எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள கேப்டன் தமிழ்ச்செல்வன், இந்த முறை மகாராஷ்டிர அமைச்சரவையில் இடம் பிடிப்பார் எனக் கூறப்படுகிறது. பாஜக தலைவரும் துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னாவிஸுக்கு நெருக்கமானவர் கேப்டன் தமிழ்ச்செல்வன். எனவே, 3வது முறை எம்.எல்.ஏ ஆகியுள்ள தமிழ்ச்செல்வன், மகாராஷ்டிராவில் அமைச்சராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் தமிழ்ச்செல்வன், சமீத்தில் ஒன் இந்தியா தமிழுக்கு மும்பையில் அளித்த சிறப்பு பேட்டியில், "காங்கிரஸ் கட்சி, லோக்சபா தேர்தலில் சொன்ன பொய் நீண்ட நாள் நீடிக்காது. எனவே நாங்கள்தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம். எனக்கு தமிழர்கள் மட்டுமல்லாமல் பல தரப்பட்ட மொழியினரும் ஆதரவு அளிக்கின்றனர். சயோன் கோலிவாடா தொகுதி குட்டி இந்தியா என்று அழைக்கப்படும் அளவுக்கு அனைத்து மாநில மக்களும் கணிசமாக உள்ள பகுதி.

பி.ஏ கூட கிடையாது: மக்கள் மனதில் பெயர் பதிந்தால் போதும். யார் எந்த ஊர்க்காரர் என்று பார்த்து ஓட்டு போடுவது இல்லை. என்னுடைய போன் நம்பர் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் உள்ளது. ஏதேனும் குறை என்றால் நேரடியாக சொல்கிறார்கள். மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளேன். எனக்கு பிஏ கூட கிடையாது. மக்களோடு நேரடி தொடர்பில் இருப்பதால் இந்த முறையும் வெற்றி பெறுவேன்” எனக் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+