தோ க்ரோர்.. அச்சு அசப்பில்.. அப்படியே மோடி வாய்ஸில் பேசி கலாய்த்த சிவசேனா பெண் தலைவர்! பாய்ந்த கேஸ்
மும்பை: மகாராஷ்ராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா தலைவர்கள் சிலர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது.
ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியதை நினைவுகூறி அவர் போலவே பேசியதாக உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆதி திராவிடர் நலப் பிரிவு தலைவர் சுஷ்மா அந்தரே டெய் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசுக்கும், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இரண்டு அணி
கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியிலிருந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள் பிரிந்து சென்றனர். இதனையடுத்து முதலமைச்சராக இருந்த உத்தவ் தாக்ரே ராஜினாமா செய்தார். பின்னர் பிரிந்து சென்ற எம்எல்ஏக்கள் பாஜக உடன் கூட்டணி வைத்து ஆட்சியமைத்தனர். மேலும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் அவர்கள் தேர்தல் ஆணையத்தை நாடினர். ஆனால் உத்தவ் தாக்ரே தரப்பினரும் விட்டுக்கொடுக்கவில்லை.

இடைத்தேர்தல்
இப்படி இருக்க மும்பையின் அந்தேரி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் யார் சின்னத்தை பயன்படுத்துவது என்று சர்ச்சை எழுத்தது. தேர்தல் ஆணையம் இருவருக்கும் சின்னத்தை ஒதுக்காமல் முடக்கியது. இதனால் தற்காலிக சின்னத்தில் இரு தரப்பினரும் போட்டியிடுகின்றனர். அதேபோல தேர்தல் பிரச்சாரமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் வெற்றிப் பெறுவது என்பது இரு தரப்பினரின் கவுரவ பிரச்னையாக பார்க்கப்படுகிறது.

வழக்குப்பதிவு
இது ஒருபுறம் இருக்க ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அரசுக்கும், உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா தலைவர்களுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சி தலைவர்கள் மீது மகாராஷ்டிரா காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. குறிப்பாக உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா கட்சியின் ஆதி திராவிடர் நலப் பிரிவு தலைவர் 'சுஷ்மா அந்தரே டெய்' மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

விமர்சனம்
மும்பையின் தானே பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய சுஷ்மா அந்தரே டெய், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வழங்கப்படும் என பிரதமர் மோடி கூறியதை நினைவுகூறி அவர் போலவே பேசியிருந்தார். இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவ்வாறு இருக்கையில் சுஷ்மா அந்தரே டெய் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலி வாக்குறுதி கொடுத்த பிரதமர் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications