"கோலாபுரி செருப்பை" காட்ட வேண்டிய நேரம்! ஆளுநர் எல்லா லிமிட்டையும் தாண்டிவிட்டார்! தாக்கரே பதிலடி

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் கூறிய கருத்துகளைச் சர்ச்சையாகி உள்ள நிலையில், இதற்கு உத்தவ் தாக்கரே கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கடந்த 2.5 ஆண்டுகளாக சிவசேனா- என்சிபி- காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது ஏக்னாத் ஷிண்டே தனது ஆதரவாளர்கள் உடன் கூட்டணி ஆட்சிக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்.

இதனால் இந்த மகா விளாஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து பாஜக உடன் சிவசேனா ஆட்சியை அமைத்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே முதல்வராகப் பதவியேற்றார்.

சர்ச்சை

சர்ச்சை

இந்தச் சூழலில் மகாராஷ்டிர ஆளுநராக உள்ள பகத்சிங் கோஷ்யாரி பேசிய கருத்துகள் சர்ச்சையான. மும்பை அந்தேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மக்களை வெளியேற்றினால் இந்த மாநிலத்தில் பணமே இருக்காது என்று பேசி இருந்தார். இது மிகப் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. ஆளுநரின் கருத்திற்குப் பலரும் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர்.

 உத்தவ் தாக்கரே தாக்கு

உத்தவ் தாக்கரே தாக்கு

இதற்கிடையே மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர ஆளுநர் மராத்தியர்களை அவமதித்து விட்டார் என்று விமர்சித்துள்ள உத்தவ் தாக்கரே, ஆளுநர் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டார் என்றும் சில கடுமையான கருத்துகளை முன் வைத்து உள்ளார்.

 இழிவுபடுத்திவிட்டார்

இழிவுபடுத்திவிட்டார்

இது தொடர்பாக அவர் கூறுகையில், "மகாராஷ்டிர ஆளுநர் பதவியில் இருக்கும் ஒருவரை நான் அவமதிக்க விரும்பவில்லை. நான் அந்த பதவியை மதிக்கிறேன். ஆனால் பகத் சிங் கோஷ்யாரி மராத்தியர்களை இழிவுபடுத்தி உள்ளார். இது மகாராஷ்டிரா மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவுபடுத்த ஆளுநர் முயல்கிறார். அவர் எல்லா வரம்புகளையும் தாண்டி வருகிறார்.

 அவமதித்து விட்டார்

அவமதித்து விட்டார்

அனைத்து கவர்னர்களும் குடியரசுத் தலைவரின் பிரதிநிதிகள் தான். குடியரசுத் தலைவரின் கருத்துகளைத் தான் ஆளுநர்கள் நாடு முழுவதும் எடுத்துச் செல்கின்றனர். அப்படிப்பட்ட ஆளுநரே இதுபோன்ற தவறுகளைச் செய்தால், அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? அவர் மராத்தியர்களையும் மராத்தியர்களின் பெருமையையும் அவமதித்து

 கோலாபுரி செருப்பு

கோலாபுரி செருப்பு

மகாராஷ்டிர ஆளுநராக இருந்த பகத் சிங் கோஷ்யாரி, கடந்த 2.5 ஆண்டுகளாக மகாராஷ்டிராவில் அனைத்தையும் அனுபவித்தார். மகாராஷ்டிர உணவு வகைகளையும் ரசித்துச் சுவைத்தார். ஆனால், இப்போது அவர் கோலாபுரி செருப்பைப் பார்க்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என்று அவர் தெரிவித்தார்.

 என்ன பேசினார்

என்ன பேசினார்

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கூறுகையில், "மகாராஷ்டிராவில் இருந்து குஜராத்தி மற்றும் ராஜஸ்தானி மக்களை வெளியேற்றினால் இந்த மாநிலத்தில் பணமே இருக்காது. குறிப்பாக மும்பை மற்றும் தானே முடங்கிவிடும். இந்தியாவின் நிதிநிலைக்கான தலைநகராக மும்பை இருக்க முடியாது' என்று அவர் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+