வருங்கால வைப்பு நிதி.. யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி! பணம் கிடைக்க எவ்வளவு காலம் ஆகும்?

Subscribe to Oneindia Tamil

மும்பை: இப்போதெல்லாம் எதாவது அவசரம் என ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணத்தை எடுக்க முயன்றால் அது கைக்கு வந்து சேரவே வார கணக்கில் ஆகிவிடுகிறது. இதற்கிடையே இந்த பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் புதிய ஒரு வசதியை இபிஎஃப்ஓ அமைப்பு கொண்டு வரவுள்ளது. இதன் மூலம் வெறும் சில நிமிடங்களில் நம்மால் பணத்தை எடுக்க முடியும். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்,

இந்த காலத்தில் நாம் எதிர்பாராத நேரங்களில் எமர்ஜென்சி செலவுகள் திடீர் திடீரென வந்துவிடுகிறது. அந்த நேரத்தில் கையில் பணமில்லை என்றால் நமது கடைசி ஆப்ஷனாக இருப்பது பிஎஃப் பணம் தான்.

UPI PF

பிஎஃப் பணம்

பிஎஃப் பணத்தை நாம் ஓய்வு பெறும்போது தான் எடுக்க முடியும் என்றாலும் கூட திடீர் மருத்துவச் சிகிச்சை, திருமணம் உள்ளிட்ட குறிப்பிட்ட காரணங்களுக்கு நம்மால் பணத்தை முன்கூட்டியே எடுக்க முடியும். ஆனால், தற்போதுள்ள செயல்முறையில் பணத்தை எடுக்கும் போது அது நமது கைக்கு வந்து சேரவே பல நாட்கள் ஆகிவிடுகிறது.

யுபிஐ மூலம் எடுக்கலாம்

இதற்கிடையே EPFO எனப்படும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, அதன் உறுப்பினர்கள் தங்கள் பிஎஃப் பணத்தை நேரடியாக யுபிஐ மூலம் எடுக்க அனுமதிக்கும் ஒரு புதிய வசதியை உருவாக்கி வருகிறது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால் அது இபிஎஃப் உறுப்பினர்களுக்கு மிகப் பெரியளவில் உதவும்.. அதன் பிறகு கூகுள், போன்பே மற்றும் பேடிஎம் என எந்தவொரு செயலியில் இருந்தும் இபிஎஃப் உறுப்பினர்கள் தங்களுக்குத் தேவையான நிதியை எடுத்துக் கொள்ளலாம்

இன்னும் சில மாதங்களில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. பெரும்பாலும் இந்தாண்டு மே அல்லது ஜூன் மாதத்திற்குள் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். யுபிஐ தொழில்நுட்பம் வந்துவிட்டால் பிஃப் பணத்தை எடுப்பது வேகமாக ஸ்மூத்தானதாகவும் மாறும். இதன் மூலம் நாட்டில் உள்ள பல கோடி EPFO ​​உறுப்பினர்கள் பயனடைவார்கள்.

இனி பிரச்சினை இருக்காது

இப்போது பிஃப் பணத்தை நெட் பேங்கிங் மூலமாகவே எடுக்க முடியும். அதற்கும் பெரிய பிராசஸ் இருக்கிறது. எமர்ஜென்சி எனப் பணத்தை எடுக்க முயன்றால் அது கைகளுக்கு வந்து சேரவே குறைந்தது 10 நாட்கள் முதல் சில வாரங்கள் கூட ஆகலாம். இந்த பிரச்சினையைத் தான் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் வசதி தீர்க்கவுள்ளது.

உங்கள் பிஎஃப் பணத்தை எடுக்க விரும்பினால் நீங்கள் முதலில் உங்கள் EPF கணக்கிற்கான KYCஐ முடிக்க வேண்டியது அவசியமாகும். மேலும், அதில் உங்கள் ஆதார், பான் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களை இணைப்பதும் கட்டாயமாகும்.

சில நிமிடங்களில் எடுக்கலாம்

இதை எல்லாம் முடித்து பக்காவாக வைத்திருந்தால் யுபிஐ மூலம் EPF பணத்தை சில மணி நேரங்களில்.. அவ்வளவு ஏன் சில நிமிடங்களில் கூட எடுக்க முடியும் என்கிறார்கள். இதன் மூலம் இபிஎஃப்ஓ ​​உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை எளிதாக எடுக்க முடிகிறது. மேலும், யுபிஐ மூலம் பணம் எடுக்கும் போது நிராகரிப்புகளும்.. குறைந்து வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

அதேநேரம் இது முதற்கட்ட தகவல்கள் மட்டுமே.. யுபிஐ இபிஎஃப் இணைப்பிற்கு சில மாதங்கள் வரை ஆகும் நிலையில், வரும் காலங்களிலேயே இது குறித்த விதிகளும் கண்டிஷன்களும் நமக்குத் தெளிவாகத் தெரிய வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+