ஒரே டைமில், ஒரே மேடையில்.. 2 பேருக்கு தாலி கட்டினாரே மாப்பிள்ளை.. "மாமியார்" வீட்டுக்கு போய்ட்டாராமே
மும்பை: 2 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து, 2வது நாளே மாமியார் வீட்டுக்கு போயுள்ளார் மாப்பிள்ளை.. என்ன நடந்தது? இரு பெண்களை மணக்க நேரிடும்போது, அதற்கு சட்டம் என்னதான் சொல்கிறது?
மும்பை சோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிங்கி மற்றும் ரிக்கி... இவர்கள் 2 பேருமே இரட்டை சகோதரிகள்... 2 பேருமே என்ஜினியரிங் படித்துள்ளார்கள்.. 2 பேருமே மும்பையில் வேலை பார்த்தும் வருகிறார்கள்..
ஸ்கூல் படித்ததில் இருந்து வேலை செய்வது ஒன்றாகவே இணைபிரியாமல் உள்ளனர்.. எங்கே போனாலும் ஒரே மாதிரியாகவே டிரஸ் செய்து கொண்டு போவார்கள்.
டெல்லியில் முதல்வர் ஸ்டாலின்..இந்தியில பெயர் இருக்கே! கவனிச்சீங்களா? கொளுத்தி போடும் திருச்சி சூர்யா

டாக்ஸி டிரைவர்
இவர்களுக்குள் எந்த பிரிவினையும் வந்துவிடக்கூடாது என்று, இவர்களது அப்பா மிகவும் செல்லமாக வளர்த்துள்ளார். சமீபத்தில், இவர்களது அப்பா இறந்துவிட்டார்.. அம்மாவுக்கும் உடல்நிலை பாதிப்படைந்துவிட்டது.. அப்படித்தான் ஒருநாள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல கால் டாக்சியை புக் செய்துள்ளார்கள்.. அப்போதுதான், டாக்சி டிரைவர் அதுல் அறிமுகமாகி உள்ளார்.. அதுலின் நடவடிக்கையும், உதவும் குணமும் 2 பெண்களுக்குமே பிடித்துவிட்டது.. எனவே, இருவருமே சேர்ந்து அதுலை திருமணம் செய்ய முடிவு செய்தனர்..

லவ் மேரேஜ்
தங்கள் விருப்பத்தை அதுலிடம் சொல்லவும் அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.. பிறகு இரு பெண்களும் சேர்ந்து அவருக்கு தங்கள் நிலைமையை புரிய வைத்தனர்.. இறுதியில் 2 பெண்களையும் திருமணம் செய்ய அதுல் ஒப்புக் கொண்டார். ஆனால், அம்மா இந்த விஷயத்துக்கு குறுக்கே நின்றார்.. ஒருவரையே 2 பேரும் மணப்பதால், ஏற்படக்கூடிய நடைமுறை சிக்கல்களை எடுத்து சொன்னார்.. ஆனாலும் மகள்கள் அவர் பேச்சை கேட்கவில்லை, அதுலை திருமணம் செய்வதில் உறுதியாக நின்றனர்.. இறுதியில் மகள்கள் விருப்பப்படி திருமணத்துக்கு சம்மதம் சொன்னார். இரு பெண்களையும் அதுல் கடந்த வெள்ளிக்கிழமை மணம் முடித்தார்..

லீகல் பாயிண்ட்
அதாவது, மதியம் 12.30 மணிக்கு, 36 வயதான ரிங்கி பட்கோங்கரை மணந்தார்.. அதற்கு பிறகு, பிங்கியை மணந்தார்.. ஒருவரையே 2 பெண்கள் மணந்த இந்த சம்பவம் இணையத்தில் வைரலானது.. மற்றொருபக்கம், சர்ச்சையும் விவாதத்தையும் கிளம்பியது. ஒரு மனைவி இருக்கும் போது மற்றொரு மனைவியை மணக்க கூடாது என்று சட்டம் சொல்லும்நிலையில், ஒரே மேடையில் 2 பெண்களை கல்யாணம் செய்யலாமா? என்று கேள்விகள் சோஷியவில் மீடியாவில் வெடித்தன.. இதனிடையே, உள்ளூர்வாசியான ராகுல் பாரத் என்ற நபர், இது குறித்து போலீசிடம் புகார் அளித்தார்.

கல்யாண பொண்ணு
இதை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் புகாரின் அடிப்படையில், மணமகன் அதுல் உத்தம் அவுடாடே மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். "கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போது இன்னொருவரை மணப்பது சட்டப்படி குற்றம்" என்று வரையறை செய்யும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494 இன் கீழ், இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.. பொதுவாக, இந்த குற்றவாளிக்கு 7 வருடம் ஜெயில் அல்லது அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படும் என்கிறார்கள்.

டபுள் மனைவி
அதேசமயம், வாழ்க்கைத்துணை உயிரோடு இருக்கும்போது, இன்னொரு திருமணத்தை செய்து கொள்வதற்கு குற்றம் என்றாலும், இதற்கும் சில விதிவிலக்குகள் உண்டு. அதன்படி, முறைப்படி முதல்மனைவியுடன் டைவர்ஸ் வாங்கி கொண்டு அதற்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம்.. அல்லது முதல் துணையின் ஒப்புதலோடு கல்யாணம் நடந்தாலும் சிக்கல் எதுவும் இல்லை.. ஆனால் வழக்காகவோ, நீதிமன்ற படியேறியோ வழக்கு தொடரப்பட்டால் சம்பந்த நபர் மீது சட்டம் பாயும் என்பதே விதி.

மாமியார் வீடு
அந்தவகையில், இந்த மஹாராஷ்டிரா கல்யாணத்தை பொறுத்தவரை, மணமக்கள் 3 பேருமே சம்மதம் தெரிவித்துதான் திருமணம் செய்துள்ளனர்.. ஆனால், வேறொருவர், இதுதொடர்பாக புகார் கொடுத்ததால் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில், மாப்பிள்ளை சட்டப்படி தண்டிக்கப்படுவாரா என்பதை சட்ட விதிகளின்படி கோர்ட் விரைவில் முடிவு செய்யும் என்கிறார்கள்.. ஆக, 2 பேரை திருமணம் செய்து, 2 நாளிலேயே 'மாமியார்' வீட்டுக்கு போய்விட்டாரே மாப்பிள்ளை???