மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங்

Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் இன்று 5ஆவது நாளாக அதிக மழை முதல் மிக அதிக கனமழை வரை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை.. வரலாறு காணாத வெள்ளத்தில் மிதக்கும் Goa

    மும்பையில் கடந்த 4 தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மிக அதிக அளவு மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் மிக அதிக மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    நாட்டின் மேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் மும்பைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் மகாராஷ்டிராவின் கிழக்கு விதர்பா பகுதிக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. பல மாவட்டங்களில் மழை கொட்டும்- வானிலை மையம்வங்கக் கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. பல மாவட்டங்களில் மழை கொட்டும்- வானிலை மையம்

    கொங்கன்

    கொங்கன்

    கோவா, கொங்கன், மத்திய மகாராஷ்டிரா, விதர்பா பகுதிகளில் பரவலாக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிவாண்டியில் கனமழை பெய்ததால் சாலைகளில் ஆறு போல் தண்ணீர் தேங்கி வீடுகள் பகுதியளவு மூழ்கி கிடக்கின்றன.

    கார்கள்

    கார்கள்

    தொடர் மழை காரணமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் பாதியளவு மூழ்கியுள்ளன. நேற்று மாலை மழையின் அளவு குறைந்தது. ஆனாலும் இரவு நேரத்தில் அதிக மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது.

    ரயில் சேவை

    ரயில் சேவை

    இந்த மழையால் ரயில் சேவை, போக்குவரத்து பாதிக்கப்படவில்லை. மகாராஷ்டிராவின் தானே மற்றும் பால்கர் மாவட்டங்களில் கனமழை கொட்டியதால் 6 அறை கொண்ட கட்டடம் இடிந்து விழுந்ததால் 8 இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

    3 முதல் 4 நாட்கள்

    3 முதல் 4 நாட்கள்

    எனினும் 4 நாட்கள் மழைக்கே இந்த நிலை, இதில் இன்னும் 3 முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மும்பையின் பல்வேறு பகுதிகள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.

    English summary
    Heavy to very heavy rainfall likely to lash in Mumbai city for 5th day.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X