வீட்டில் போதைப்பொருள் வைத்திருந்ததால்.. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல நடிகர் அதிரடி கைது!
மும்பை: சமீப காலமாக இந்தி திரையுலகில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாகிவிட்டது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை சம்பவத்துக்கு பிறகு அவரது காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தி முதலில் போதைப்பொருள் வழக்கில் சிக்கினார்.
அதன்பின்னர் இந்தி திரையுலகின் முன்னணி நடிகர், நடிகைகளும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வலையில் சிக்க ஆரம்பித்து விட்டனர். இது தொடர்பான வழக்கில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலிகான், ஸ்ரத்தா கபூர் ஆகியோருக்கு போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தினர்.

போதைப்பொருள் நடமாட்டம்
இது தவிர இந்தி பிரபலங்கள் சிலர், கன்னட நடிகைகள் சஞ்சனா உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் நடமாட்டம் தொடர்பாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது இந்தி நடிகர் அர்மான் கோஹ்லி கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் போதைப்பொருள் நெட்வொர்க் கும்பலை சேர்ந்த அஜய் ராஜு சிங் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

அதிரடி கைது
அவர் கொடுத்த தகவலின்பேரில் இந்த கும்பலுக்கும் நடிகர் அர்மான் கோஹ்லிக்கும் தொடர்பு இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து புறநகர் அந்தேரியில் உள்ள அர்மான் கோஹ்லியின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டில் இருந்து 'கோகைன்' போதைப்பொருள் கைபற்றப்பட்டது. இதன் பேரில் இன்று காலை நடிகர் அர்மான் கோஹ்லியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தீவிர விசாரணை
அர்மான் கோஹ்லி வைத்திருந்த போதைப்பொருள் தென் அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கும்பலிடம் இருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் போதைப்பொருள் நெட்வொர்க் கும்பலை சேர்ந்த அஜய் ராஜு சிங் வழியாக நடிகர் அர்மான் கோஹ்லியை சென்றடைந்துள்ளது. இந்த போதைபொருள்கள் இந்தியா வந்தது எப்படி? இதன் பின்னணியில் வேறு யார் இருக்கிறார்கள்? நடிகர் அர்மான் கோஹ்லிக்கும், சர்வதேச கடத்தல் கும்பலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்பது தொடர்பாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த அர்மான் கோஹ்லி?
கைது செய்யப்பட்ட நடிகர் அர்மான் கோஹ்லி, இந்தி திரையுலக முன்னணி நடிகரான சல்மான் கான் நடித்த "பிரேம் ரத்தன் தன் பயோ" திரைப்படத்தில் நடித்துள்ளார். வேறு சில படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலும் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications