கணவர் ஆபாச படம் எடுத்த போது செய்தது என்ன? ஷில்பா ஷெட்டி தந்த திடுக் வாக்குமூலம்.. குழம்பிய போலீஸ்
மும்பை: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஷில்பா ஷெட்டியிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நடிகை ஷில்பா ஷெட்டி இயக்குனரும் தொழிலதிபருமான ராஜ்குந்த்ரா என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் ராஜ்குந்த்ரா பெண்களை வைத்து ஆபாச படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டதாக புகார் வைக்கப்பட்டது.
இது தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சோதனையில் சிக்கின. பெண்களை வைத்து மோசமான ஆபாச படங்களை தயாரித்து அதை இணையத்தில் தனி வெப்சைட்களில் வெளியிட்டதும், இதற்காக மொபைல் ஆப்களை அவர் உருவாக்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

கைது
இதையடுத்து மும்பை போலீசார் இவரை கைது செய்தனர். இவர் ஹாட்ஷாட்ஸ் என்ற பெயரில் இந்த ஆபாச செயலியை நடத்தி வந்து இருக்கிறார். இது தொடர்பாக கூகுளுக்கு புகார் சென்ற நிலையில் அந்த செயலி கூகுள் ப்ளே ஸ்டோர் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் அதன்பின் மீண்டும் இவர் பாலிபேம் என்ற இன்னொரு செயலியை உருவாக்கி இருக்கிறார்.

நீக்கம்
ஆனால் அந்த செயலியும் போலீஸ் நடவடிக்கைக்கு பின் நீக்கப்பட்டது. இது இரண்டிலும் பெண்களின் ஆபாச வீடியோக்களை ஷில்பா ஷெட்டியின் கணவர் வெளியிட்டு வந்து இருக்கிறார். பல பெண்களின் வீடியோக்கள், பாலியல் ரீதியான புகைப்படங்கள் இதில் இருந்துள்ளன. இந்த வழக்கில் மும்பை தனிப்படை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

வியான் நிறுவனம்
வியான் என்ற நிறுவனத்தின் அலுவலகங்களை பயன்படுத்திக்கொண்டு இந்த வீடியோக்களை தினமும் இவர் உருவாக்கி இருக்கிறார். இந்த நிலையில்தான் இவர் உட்பட மேலும் 7 ஊழியர்கள் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில் 4 பேர் ராஜ்குந்த்ராவிற்கு எதிராக வாக்குமூலம் அளித்துள்ளனர். ராஜ்குந்த்ரா மற்றும் அவரின் நெருங்கிய நண்பர் ரியான் தோர்பே ஆகியோருக்கு எதிராக 1,500 பக்க குற்றப்பத்திரிக்கையை குற்றப்பிரிவு போலீசார தாக்கல் செய்தனர்.

வாக்குமூலம்
இதில் ராஜ்குந்த்ரா கொடுத்த வாக்குமூலத்தில், நான் பாலியல் ரீதியான படங்களை எடுக்கவில்லை. நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைமில் கூட இப்படி வீடியோக்கள் இருக்கின்றன. நான் அடல்ட் வீடியோ மட்டுமே எடுத்தேன். இது ஆபாச படங்கள் கிடையாது. தவறான நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. பாலிவுட் படங்களில் கூட இப்படி எல்லாம் காட்சிகள் இருக்கின்றன என்று விளக்கம் அளித்துள்ளார்.

ஷில்பா ஷெட்டி விளக்கம்
ஷில்பா ஷெட்டி கொடுத்த வாக்குமூலத்தில்.. எனக்கு இதெல்லாம் தெரியாது. இப்படி ஒரு சம்பவம் நடந்தது குறித்து எனக்கு எதுவுமே தெரியாது. இதை எல்லாம் கவனிக்க எனக்கு நேரம் கிடையாது. அவர் ஆபாச படம் எடுத்த போது நான் அருகிலேயே இல்லை. நான் பிசியாக இருந்தேன். அவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்று எனக்கு தெரியாது என்று ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

போலீஸ்
இவரின் வாக்குமூலம் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமல் இப்படி நடந்திருக்க வாய்ப்பு இல்லை என்று கருதப்பட்ட நிலையில் அவர் இப்படி மொத்தமாக எதுவுமே தெரியாது என்று கொடுத்துள்ள வாக்குமூலம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஷில்பா ஷெட்டி இப்படி தெரிவித்து இருந்தாலும் அவரிடம் மேலும் விசாரணை நடக்க உள்ளது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்கில் மேலும் சில குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications