“பெரும் வெற்றி நோக்கி இந்தியா கூட்டணி..” சசி தரூர் பரவசம்
மும்பை: 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் ஒரு சில இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்த இந்தியா கூட்டணி, இந்த முறை மாபெரும் வெற்றியை நோக்கி செல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
லோக்சபா தேர்தல் இந்தியாவில் இந்த முறை ஏழு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை 3 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்று நான்காம் கட்ட தேர்தல் ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. தெலங்கானாவில் உள்ள 17 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆந்திராவில் 25, உத்தரப் பிரதேசத்தில் 13, பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்தியப் பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, ஒடிசாவில் 4, மேற்கு வங்கத்தில் 8 மற்றும் ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளுக்கு இன்று லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது.

லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு அணியும், காங்கிரஸ் தலைமையில் மிகப்பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கினற்ன. கடந்த முறை வட மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார் டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பதிவு செய்தது. அதுவே பிரதமர் மோடி தலைமையிலான பாஜக 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சியமைக்க காரணமாக இருந்தது.
இந்நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் மாநில அளவில் பிரிந்து இருந்தாலும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியமைக்க ஆதரவு அளிப்போம்என்று அறிவித்துவிட்டன. கூட்டணி அமைத்தும் தேர்தல் சந்தித்துள்ளன. இந்தியாவில் உத்தரப்பிரதேசத்திற்குப் பிறகு, மகாராஷ்டிரா மாநிலம் தான் லோக்சபா தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களை (48 இடங்கள்) நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறது. 2019ல் பாஜகவும், பிரிக்கப்படாத சிவசேனாவும் 41 இடங்களில் வெற்றி பெற்றன.
இதனிடையே 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த உடனேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது,. சிவசேனா-பாஜக கூட்டணியின் முறிவு ஏற்பட்டதால் மகா கூட்டணி உருவாகி சிவசனோவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார். அதன்பிறகு மகாராஷ்டிராவின் இரண் முக்கிய கட்சிகளான சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் பெரிய அளவில் பிளவு ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா அணியும், அஜித்பவார் தலைமையில் என்சிபி கட்சி தலையில் ஒரு அணியும் பிரிந்து பாஜகவிற்கு ஆதரவு அளித்தன.
இதனிடையே ஏக்நாத் ஷிண்டே அணி அதிகபட்சமாக சேனாவின் 23 எம்.பி.எஸ்.களுடன் தனி அணியாக வெளியேறியது. இந்நிலையில் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணி 21 இடங்களிலும், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (என்சிபி-சரத்சந்திர பவார்) 10 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மறுபுறம், பாஜக 28 இடங்களிலும், சிவசேனா (ஷிண்டே) 15 இடங்களிலும், என்சிபியின் அஜித் பவார் அணி 4 இடங்களிலும், ராஷ்டிரிய சமாஜ் கட்சிக்கு ஒரு இடத்திலும் போட்டியிடுகிறது.
என்டிடிவிக்கு காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் சசி தரூர் அளித்த பேட்டியில், "2019-ல் 48 இடங்களில் ஒரு சில தொகுதிகளை மட்டுமே வெல்ல முடிந்த மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றியை நோக்கி செல்கிறது. பாஜகவுக்கும் இது தெரியும். யாரும் கூட்டணியுடன் இணைத்துக் கொள்ளலாம் என்று பாஜகவின் வெளிப்படையான அழைப்பை சுட்டிக்காட்டிய அவர், இது வளர்ந்து வரும் அவநம்பிக்கையின் அடையாளம் என்றார். அண்மையில் பிரதமர் மோடி, அஜித்பவாருடன் இணைந்து செயல்படுவாடு சரத்பவாருக்கு அழைப்பு விடுத்திருந்ததை சுட்டிக்காட்சி சசிதரூப் இப்படி பேசியுள்ளார்.
இதனிடையே மகாராஷ்டிரா மாநில வாக்காளர்களின் மனநிலை படிக்க முடியாததாக உள்ளதாக கூறிய சசிதரூர், மாநிலத்தில் தான் கலந்து கொண்ட பொதுக் கூட்டங்களில் தனக்கு மிகவும் சாதகமான பதில் கிடைத்துள்ளது, நேற்று நான் மும்பை நகரத்தில் இரண்டு தொகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தேன், இன்று காலை நான் மூன்றாவது இடத்திற்குச் சென்று சுமார் 350 பேருடன் அமர்ந்து பேசினேன். ஒவ்வொரு இடத்திலும் மக்களிடையே இந்தியா கூட்டணி மீது மிகுந்த ஆர்வத்தை கண்டேன். மகாராஷ்டிராவில் நாங்கள் மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் செல்கிறோம் என்று நான் நினைக்கிறேன்" இவ்வாறு சசிதரூர் கூறினார்.












Click it and Unblock the Notifications