"சீட் இருக்கு.. விண்டோ எங்கே?" தமிழ் பிரபலத்திற்கு அதிர்ச்சி கொடுத்த இண்டிகோ விமானம்! கலகல சம்பவம்
மும்பை: விமான பயணங்களின் போது ஜன்னலோர சீட்களில் அமர்ந்து பயணிக்க அனைவருக்குமே பிடிக்கும். இதற்காக நம்மில் பலரும் கூடுதல் கட்டணத்தையும் செலுத்தி டிக்கெட் புக் செய்வோம். அப்படி புக் செய்த பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளருக்கு ஒரு வினோதமான பிரச்சினை நேர்ந்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் விமானத்தில் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு மட்டுமின்றி உள்நாட்டிலும் முக்கிய நகரங்களுக்கு இடையேயான விமானச் சேவை வேகமாக அதிகரித்தே வருகிறது.

விமான டிக்கெட்:
விமானங்களில் பயணிக்கும் போது பல வினோதமான சம்பவங்கள் நடக்கும். அதிலும் நமது நாட்டில் இப்போது இருப்பவை எல்லாம் லோ காஸ்ட் கேரியர் எனப்படும் குறைந்த செலவில் இயக்கப்படும் விமானங்கள். இந்த வகையான விமானங்களில் டிக்கெட் ரேட் குறைவாக இருந்தாலும் கூட மற்ற அனைத்து விஷயங்களுக்கும் தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும்.
உங்களுக்கு விருப்பமான இருக்கையைத் தேர்வு செய்யக் கூட தனியாகக் கட்டணம் செலுத்த வேண்டும். சவுகரியமாகப் பயணிக்க வேண்டும் என்பதற்காகப் பலரும் சீட்டை தேர்வு செய்யவும் தனியாகக் கட்டணம் செலுத்துவார்கள். இதில் விண்டோ சீட் அதாவது ஜன்னல் அருகே உள்ள சீட்களுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகமாகவே இருக்கும். அப்படி விண்டோ சீட் புக் செய்வோருக்கும் கூட சில நேரங்களில் கமெடி நடந்துவிடும்.
பிரதீப் முத்து:
அப்படியொரு சம்பவம் தான் பிரபல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளரான பிரதீப் முத்துவுக்கு நடந்துள்ளது. அவர் தனது விமான பயணத்திற்கு விண்டோ சீட் புக் செய்துள்ளார். விமானத்தில் ஏறி அமர்ந்த போது அது ஓரத்தில் இருக்கும் சீட் தான் என்றாலும் அங்கே விண்டோ இல்லை. இதைப் போட்டோ எடுத்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனக்கே உரித்தான பாணியில் நக்கல் போஸ்ட் செய்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனையாளரான பிரதீப் முத்து தனது ட்விட்டரில், "இண்டிகோ நான் ஜன்னலோர சீட்டிற்கு தானே பணம் கொடுத்தேன்.. ஜன்னல் எங்கே?" என்று கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். அவரது இந்த ட்வீட் இணையத்தில் வேகமாக வருகிறது. அவர் மட்டுமின்றி மேலும் பலருக்கு இதுபோல விண்டோவே இல்லாத விண்டோ சீட் கிடைத்து இருக்கிறது போல. அவர்கள் எல்லாம் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்கள்.
நெட்டிசன்கள்:
அதேநேரம் இந்த சீட்களை விண்டோ சீட் என சொல்லி இண்டிகோ விற்கக்கூடாது என்றும் நெட்டிசன்கள் சொல்லி வருகிறார்கள். எந்த சீட்களில் அருகே விண்டோ இல்லை என்பது நிறுவனத்திற்கு நிச்சயம் தெரியும்.. எனவே, அந்த சீட்களில் அருகே விண்டோ இருக்காது என்பதை புக் செய்யும் போதே தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.
இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர், "பல விமானங்களிலும் இதுபோல ஓரிரு இருக்கைகளில் அருகே விண்டோ இருக்காது. சர்வதேச நிறுவனங்கள் விண்டோ இருக்காது என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டே டிக்கெட்டை விற்கிறார்கள். ஆனால், இண்டிகோ அதைச் செய்வதில்லை. இந்த தவறை இண்டிகோ நிறுவனம் திருத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.
இண்டிகோ:
பிரதீப் முத்துவின் இந்த ட்வீட் இணையத்தில் டிரெண்டான நிலையில், இண்டிகோ நிறுவனம் பிரதீப் முத்துவின் பயண டிக்கெட் குறித்த தகவல்களைப் பகிருமாறும் அடுத்தகட்ட உதவிகளைச் செய்யத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications