மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிக்கலில் ஜெட் ஏர்வேஸ்.. வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்கள் திடீர் ரத்து.. பயணிகள் அவதி

Google Oneindia Tamil News

மும்பை: வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்களை இன்று, மற்றும் நாளை ரத்து செய்துள்ளது ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம்.

நிதி பிரச்சனையில் சிக்கி தத்தளித்து வருகிறது ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம். இந்த நிலையில் படிப்படியாக தனது விமான சேவை எண்ணிக்கையை அந்த நிறுவனம் குறைத்து வருகிறது.

Jet Airways has suspended all its international flights

கடந்த வாரம் 26 விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வாரம் அது 14 ஆக குறைந்தது. இப்போது ஜெட் ஏர்வேஸ் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று மற்றும் நாளை இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பாரிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களுக்கு இயக்கவிருந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உள்நாட்டு விமான சேவையை பொறுத்தளவில் மும்பையில் இருந்து கொல்கத்தா, கொல்கத்தாவில் இருந்து குவஹாத்தி, டேராடூனில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தமிழ் நாகரீகம் உறுதியாகிவிட்டதே.. சமஸ்கிருதம் எதற்கு? அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்த ஹைகோர்ட் தமிழ் நாகரீகம் உறுதியாகிவிட்டதே.. சமஸ்கிருதம் எதற்கு? அறிவிப்பாணையை அதிரடியாக ரத்து செய்த ஹைகோர்ட்

இந்த இடையூறுக்கு தங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ள, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பயண கட்டணங்கள் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது

English summary
Jet Airways has suspended all its international flights scheduled for tonight due to operational reason.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X