இந்தியாவை விட்டு போகமாட்டேன்.. நடிகர் இம்ரான்கான் பிடிவாதம்! மும்பை ஹைகோர்ட்டுக்கு ஓட்டம்
மும்பை: அமெரிக்க குடியுரிமை பெற்ற நடிகர் இம்ரான் கான் கடந்த 10ம் தேதி மும்பையில் நடந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டத்தில் பங்கேற்று கைதானார். இதையடுத்து வரும் 28 ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வெளிநாட்டு பதிவு அலுவலகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்நிலையில் தான் இந்தியாவை விட்டு வெளியேற முடியாது. வெளிநாட்டு பதிவு அலுவலகம் வழங்கிய நோட்டீஸ்க்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று இம்ரான்கான் மும்பையில் உள்ள உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறி நாடு முழுவதும் கடந்த 10ம் தேதி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். மும்பையில் கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடந்தது
இந்த போராட்டத்தில் நடிகர் அமீர்கானின் உறவினரான நடிகர் இம்ரான்கான் தனது காதலியுடன் பங்கேற்றார். அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இம்ரான்கானின் இந்த போராட்ட பங்கேற்பு சர்ச்சையை கிளப்பியது.
ஏனென்றால் இம்ரான்கான் அமெரிக்க குடியுரிமையை பெற்றவர். வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் நம் நாட்டிற்கு வரும்போது போராட்டங்களில் ஈடுபடக்கூடாது. ஆனால் இம்ரான் கான் இந்திய தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வேண்டும் என்று நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றார். இதனால் இம்ரான்கானை உடனடியாக நாட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து வெளிநாட்டு பதிவு அலுவலகம் (Foreigners Regional Registration Office or FRRO) சார்பில் இம்ரான்கானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், ''நீங்கள் அமெரிக்க குடியுரிமையை பெற்றுள்ளீர்கள். இந்தியாவின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025ன் வகுக்கப்பட்ட விதிகளை மீறி உள்ளீர்கள். இதனால் அக்டோபர் 28 ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்'' என உத்தரவிடப்பட்டு இருந்தது.
இது இம்ரான்கானுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் தன்னை இந்தியாவில் இருந்து வெளியேற வழங்கப்பட்ட உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் அவசர மனுத்தாக்கல் செய்துள்ளார். நடிகர் இம்ரான்கான் சார்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜூல்பிகர் மேனே், பர்வேஸ் மேனன் மற்றம் சிராக் நாயக் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுவை அவசரமாக நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த மனுவில் நடிகர் இம்ரான்கான் சார்பில் கூறப்பட்டுள்ளதாவது:''கடந்த 10ம் தேதி போராட்டத்தில் பங்கேற்றதால் அக்டோபர் 28 ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி வெளிநாட்டு பதிவு அலுவலகம் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இந்த நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும்.
அதுமட்டுமின்றி இந்த உத்தரவின் பின்னணி பற்றிய விவரத்தை எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும். ஏனென்றால் நான் எந்த மாதிரியான விதியை மீறினேன் என்பது பற்றி நோட்டீஸில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. என்னிடம் எந்த விசாரணையோ, நோட்டீஸ் வழங்கி விசாரணையும் நடத்தவில்லை.
என்னுடைய அமெரிக்க குடியுரிமையை மட்டுமே கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாறாக நான் ஓசிஐ கார்டு (ஓசிஐ கார்டு என்பது வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் அடையாள அட்டை. இதன்மூலம் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்கள் நம்நாட்டில் தங்கவும், பணிபுரியவும் முடியும்) வைத்துள்ளேன். அதனை கருத்தில் கொள்ளவில்லை. இதனால் இந்த உத்தரவுக்கு அவசரமாக தடை விதிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.




Click it and Unblock the Notifications
