விமானங்களை போல் அரசு பேருந்துகளில் விமான பணிப்பெண்கள் நியமனம்! இது என்ன புதுசா இருக்கே!
மும்பை: மகாராஷ்டிர மாநில அரசு பேருந்துகளில் விமானங்களில் இருப்பதை போல் பணிப்பெண்களை அந்த மாநில அரசு அமர்த்தியுள்ளது. எந்தெந்த பேருந்துகளுக்கு விமான பணிப்பெண்கள் நியமித்துள்ளார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
விமானங்களில் விமானப் பணிப்பெண்கள் இருப்பார்கள். இவர்களது பணி தேசிய , சர்வதேச , வணிக, பட்டய மற்றும் ராணுவ விமானங்களில் பயணிகளின் பாதுகாப்பையும் வசதியையும் உறுதி செய்வதே அவர்களுடைய பணியாகும்.

விமான விதிகள் குறித்து பயணிகளுக்கு விளக்க வேண்டும். விமானத்தின் தூய்மை, இருக்கைகள், உணவுகள் சரியாக உள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும்.
பயணிகளை வரவேற்று அவரவர் இருக்கைகளுக்கு செல்ல வழிகாட்டிட வேண்டும். அனைவரும் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா என்பதையும் சரி பார்க்க வேண்டும். பயணிகளுக்கான உணவை கொடுத்தல், மருத்துவ பராமரிப்பு , மருத்துவ ஆலோசனைகளை வழங்குதல் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
இதற்கென 2 ஆண்டுகள் படித்தல் வேண்டும். ஹேர் ஹோஸ்டஸ்களுக்கான வயது வரம்பு என்பது 18 வயது முதல் 26 வயது வரையாகும். இவர்களுக்கு விமான நிறுவனங்களுக்கேற்ப மாதம் ரூ 1 லட்சம் வரை ஊதியம் கிடைக்கிறது. இதே போன்ற விமான பணிப்பெண்களை அரசு பேருந்துகளிலும் இயக்கலாம் என மகாராஷ்டிர அரசு முடிவு செய்துள்ளது.
அதாவது மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இயக்கப்படும் அரசு சிவ்னெரி எலக்ட்ரிக் சொகுசு பேருந்துகளில் மட்டும் பணிப்பெண்களை நியமிக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. அதில் முதல் கட்டமாக மும்பை, புனே வழித்தடத்தில் இயங்கும் பேருந்துகளில் சிவ்னெரி சுந்தரி என்ற பெயரில் பணிப்பெண்களை நியமித்துள்ளனர்.
இவர்கள் பயணிகள் பேருந்துகளில் ஏறும் போது அவர்களை வரவேற்பதற்கும் பயணிகள் ஏறி இறங்க உதவுவதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மும்பை, புனேவுக்கான வழித்தடம் 200 கி.மீ. நீளமானது. இதுகுறித்து காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.
மகாராஷ்டிராவில் இயங்கி வரும் அரசு பேருந்துகளில் உள்கட்டமைப்பு வசதிகள் சரியில்லை, பேருந்து நிலையங்களில் பெண்களுக்கென கழிப்பறை வசதிகளும் சுத்தமாக இல்லை. இது போன்ற பிரச்சினைகளை சரி செய்யாமல் சிவ்னெரி சுந்தரிகளை அரசு நியமிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
அது போல் மகாராஷ்டிர மாநில போக்குவரத்து கழக பணியாளர்கள் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய ஊதியத்தையும் போனஸையும் வழங்குவதில்லை. இந்த பணிப்பெண்கள் குறித்த கான்செப்ட்டுக்கு போக்குவரத்து பணியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications