மிக மோசமான நிலையில் மகாராஷ்டிரா... மீண்டும் லாக்டவுன்... உத்தவ் தாக்கரேவின் அடுத்த திட்டம் என்ன?
மும்பை: மகாராஷ்டிராவில் இந்தாண்டில் இல்லாத அளவுக்கு 15, 817பாதிப்பு உறுதி பேருக்குக் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா பரவல் குறையத் தொடங்கியது. இருப்பினும், கடந்த சில வாரங்களாகவே நாட்டின் சில மாநிலங்களில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது.
காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும்.. வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு.. ஸ்டாலின் வேண்டுகோள்
இதைக் கண்காணிக்க மத்திய அரசு சார்பில் சிறப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டன. இருப்பினும், மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் மோசமாகவே உள்ளது.

கொரோனா பாதிப்பு
குறிப்பாக, மகாராஷ்டிராவில் நிலைமை கைமீறிச் செல்லும் அளவுக்கு மோசமடைந்துள்ளது. இந்தாண்டில் இல்லாத அளவுக்கு அங்கு நேற்று ஒரே நாளில் 15, 817 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது 1,10,485 பேர் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

வேகமெடுக்கும் கொரோனா
மகாராஷ்டிராவில் ஜனவரி மாதம் வரை மூன்று மாதங்கள் வைரஸ் பரவல் தொடர்ந்து குறைந்தே வந்தது. இருப்பினும், கடந்த மாதம் வைரஸ் பரவல் மீண்டும் மெல்ல அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் சராசரியாகத் தினமும் 6,000 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாகத் தினசரி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 15,000ஐ நெருங்கியுள்ளது.

Array
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 11,344 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,17,744 தாண்டியுள்ளது. தற்போது 5.47 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதேபோல நேற்று மட்டும் 56 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கு
நாட்டில் புதிதாக கொரோனா உறுதி செய்யப்படும் வழக்குகளில் 85% வெறும் ஆறு மாநிலங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. மகாராஷ்டிரா கேரளா, தமிழகம், பஞ்சாப், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் வைரஸ் பரவல் மோசமாக உள்ளதால், அங்கு ஒரு வாரத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி செலுத்தும் பணிகளை அம்மாநில அரசு வேகப்படுத்தியுள்ளது.