பாலியல் தொழிலில் 10ம் வகுப்பு மாணவி.. பணத்துக்காக விபசாரத்தில் தள்ளிய கொடூர தாய்.. நடுங்க வைக்கும் தகவல்
மும்பை: பணம் சம்பாதிக்கும் ஆசையில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, அவரது தாயே பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். இதில் மாணவியை 2 பேர் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி மாணவி தனது ஆசிரியையிடம் கூறி கதறி அழுது உதவி கோரிய நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஆண் நண்பரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் காத்கோபார் கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு மாணவி. இவருக்கு வயது 15 ஆகிறது. அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில் தான் மாணவியை அவரது தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மாணவியின் தாய் தனது ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து மாணவியை விபசாரத்தில் தள்ளி உள்ளார்.

இதுபற்றி அறிந்த மாணவி, தனது தாயிடம் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லை. மாணவியை அடித்து உதைத்து விபசார தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார். இதனால் மனம் உடைந்த மாணவி சம்பவம் பற்றி தனது பள்ளி ஆசிரியையிடம் கூறினார். இதையடுத்து அவர் தொண்டு நிறுவனம் உதவியுடன் போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து போலீசார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவியை கட்டாயப்படுத்தி அவரது தாய் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அதன்பிறகு மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மாணவி காப்பகத்தில் உள்ள நிலையில் அவருக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி போலீஸ் தரப்பில், ‛‛மாணவிக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அவளது தந்தை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கூறியுள்ளார். அதற்கு மாணவி மறுத்துள்ளார். இதனால் கோபமான தாய், மாணவியை அடித்து துன்புறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் 3 பேரிடம் பணம் வாங்கி உள்ளார். அதில் 2 பேர் மாணவியை பலாத்காரம் செய்துள்ளனர்.
ஆகஸ்ட் 27 ம் தேதி சிறுமி தனது வீட்டை விட்டு வெளியேறி தனது தோழியுடன் செப்டம்பர் மாதம் 20ம் தேதி வரை தங்கினார். அதன்பிறகு மீண்டும் வீட்டுக்கு சென்றார். நிலைமை மாறும் என்று மாணவி நினைத்தார். ஆனால் நிலைமை மாறவில்லை. இதனால் ஆசிரியையிடம் கூறியுள்ளார்.
தற்போது மாணவியின் தாய் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்வோம். அதேபோல் மாணவியை பலாத்காரம் செய்த நபர்கள் பற்றியும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்'' என கூறப்பட்டது. கைதான 2 பேர் மீதும் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 64 (பலாத்காரம்), 96 (குழந்தையை பாலியல் செயலுக்கு கட்டாயப்படுத்துதல்), 98 (குழந்தையை விபசாரம், உடலுறவுக்கு பயன்படுத்துவது ) மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications