73 வயது மூதாட்டிக்கு வந்த கல்யாண ஆசை! 63 வயது நபர் பார்த்த கேவலமான காரியம்.. கடைசியில் மெகா ட்விஸ்ட்
மும்பை: சிறுமிகள் முதல் இளம்பெண்கள் வரை காதல் வலையில் வீழ்த்தி பின்னர் அவர்களுடன் பழகிய போட்டோ, வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தோடு பல கும்பல்கள் சுற்றி வரும் நிலையில், இதற்கு மூதாட்டி மட்டும் விலக்கு கிடையாது என்று மூதாட்டியையும் ஏமாற்றியிருக்கும் ஒரு சம்பவம் மும்பையில் அரங்கேறியுள்ளது. 73 வயது ஆன அந்த மூதாட்டிக்கு வந்த கல்யாண ஆசையை காரணமாக வைத்து அந்த 62 வயது முதியவர் ரூ.57 லட்சத்தை அவரிடம் இருந்து ஆட்டையை போட்டுள்ளார்.
எப்படியாவது பணக்காரர் ஆகி விட வேண்டும், சொகுசாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உழைக்காமல் திருடுதல், கொள்ளையடித்தல், மிரட்டி பணம் பறித்தல் என நாச வேலைகளில் சில கும்பலினர் சுற்றி வருகின்றனர். இதிலும் குறிப்பாக சிலர், இளம்பெண்கள், சிறுமிகளை தங்கள் காதல் ஆசையில் விழ வைத்து அவர்களோடு ஒன்றாக சுற்றிவிட்டு பின்னர் பணம் பறிக்க முயற்சிக்கிறார்கள்.

மூதாட்டிக்கு வந்த திடீர் ஆசை
பணத்தை தரவில்லையென்றால், தன்னுடன் சுற்றிய போட்டோ வீடியோக்களை ஆபாசமாக எடிட் செய்து வைத்து மிரட்டி பணத்தை கரந்து வருகிறார்கள். இதில் இளம்பெண்கள், சிறுமிகள் காதல் ஆசை வலையில் விழுந்து விடுவதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் மும்பையில் திருமண ஆசை வந்த 73 வயது மூதாட்டி ஒருவரும் ஏமாந்து போய் ரூ.57 லட்சத்தை பறி கொடுத்துள்ளார்.
மும்பையை அடுத்து உள்ள தானே மாவட்டம் டோம்பிவிலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருபவர் 73 வயது மூதாட்டி. தனியாகவே வசித்து வந்தார். இந்த நிலையில் திடீரென அவருக்கு ஒரு ஆசை வந்துள்ளது. வாழ்க்கை துணை வேண்டும் என்று நினைத்த அவர், அதற்கான முயற்சிகளை செய்தார். இதற்காக செய்தித் தாள் ஒன்றில் விளம்பரம் செய்திருக்கிறார்.
நம்பிக்கையாக பேசிய ரோமியோ முதியவர்
என்னை திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று அவரது செல்போன் எண்ணையும் கொடுத்து இருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்து பலர் அவருக்கு போன் செய்துள்ளனர். இதில் 62 வயது முதியவர் ஒருவர் உங்களை திருமணம் செய்ய எனக்கு சம்மதம் என்று செல்போனில் பேசியுள்ளார்.
திருமண ஆசை வந்த மூதாட்டியிடம் என்ன வார்த்தையை கூறினால் சம்மதிப்பார் என்று நன்கு அறிந்து வைத்துக்கொண்ட அந்த முதியவர், நம்பிக்கையாக சில வார்த்தைகளை கூறியுள்ளார். மேலும் புனேயில் நாம் இருவரும் அமைதியான வாழ்க்கையை வாழலாம் என்றும் உறுதியளித்துள்ளார். அவரது பேச்சில் மயங்கிய மூதாட்டியும் அந்த முதியவர் மீது காதலில் விழுந்துள்ளார்.
இளம் காதல் ஜோடி போல
இளம் காதல் ஜோடிகள் போல இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர். தன் மீது முழுமையாக நம்பிக்கை வந்ததை அறிந்துகொண்ட முதியவர், நைசாக நாம் இருவரும் சந்தோஷமாக மகிழ்ச்சியாக வாழ புனேயில் ஒரு வீடு பார்த்து இருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். மேலும் அதற்கு ரூ.35 லட்சம் வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதையடுத்து அந்த முதியவர் வீடு வாங்கியது பத்திரம், ரசீது என போலி சான்றிதழ்களை காண்பித்து உள்ளார்.
இன்னும் கொஞ்ச நாளில் நாம் புனேவுக்கு சென்றுவிடுவோம் என்று கூறியிருக்கிறார். அதுவை நான் உன் வீட்டில் தங்கட்டுமா என்று கேட்க மூதாட்டியும் சம்மதம் தெரிவித்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட ரோமியோ முதியவர், மூதாட்டியின் வீட்டில் இருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் டெபிட் கார்டை திருடிச் சென்றார். டெபிட் கார்டில் இருந்து திடீரென 2 லட்சத்து 40 ஆயிரம் எடுக்கப்பட்டதை பார்த்து முதியவருக்கு கால் செய்த போது அவர் போனை எடுக்கவில்லை.
முதியவருக்கு வலைவீச்சு
மேலும் வீட்டில் இருந்த நகையையும் காணவில்லை என்பது அவருக்கு தெரிந்தது. இதனால் தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த மூதாட்டி புனேயில் வாங்கிய வீட்டின் ஆவணங்களை சரிபார்த்து இருக்கிறார். இதில் அதுவும் பொய் என்பதை உணர்ந்த மூதாட்டி இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் வழக்குப் பதிவு செய்து மூதாட்டியிடம் திருமண ஆசை காட்டி ஏமாற்றிய ரோமியோ முதியவரை தேடி வருகிறார்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி












Click it and Unblock the Notifications