அடி கொஞ்சம் பலமோ? பக்கத்தில் வந்த பைக்கை ஓங்கி மிதித்த பெண்.. "கர்மா".. கடைசியில் இப்படி ஆகிடுச்சே
மும்பை: மும்பையில் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், பக்கத்தில் சென்று கொண்டிருந்த பைக்கை மிதித்த போது நிலைத்தடுமாறி தலைகுப்புற விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வண்டியை தாறுமாறாக ஓட்டியதை கேள்வி கேட்டதால் வெகுண்டெழுந்து அந்த பெண் செய்த தவறான செயல், அவருக்கே பாதகமாக மாறியுள்ளது.
இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருவது ஒருபுறம் இருக்க, வரம்பு மீறி சென்ற அந்தப் பெண்ணை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

தேடி வரும் கர்மா..
விஞ்ஞானமும், அறிவியலும் எத்தனை வளர்ந்தாலும் உலகில் நடக்கும் சிலவற்றுக்கு அவற்றால் பதில் சொல்ல முடியாது. அவற்றில் ஒன்றுதான் கர்மா. அதாவது பிறருக்கு நாம் என்ன செய்கிறோமா அதுவே நமக்கு திரும்ப கிடைக்கும் என்பதே கர்மாவுக்கான சிறிய விளக்கம். அது நன்மையானாலும் சரி; தீமையானாலும் சரி. இதை அடிக்கடி பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். "முடிந்த அளவுக்கு பிறகு நன்மை செய்யுங்கள், உங்களுக்கு தானாக நன்மை கிடைக்கும்" என்பதுதான் அனைத்து மதங்களும் வலியுறுத்தும் விஷயம். இதனை நாமே பல நேரம் பார்த்திருப்போம். சில நேரங்களில் நாமே கூட உணர்ந்திருப்போம். இதற்கு வீடியோ ஆதாரமே தற்போது கிடைத்திருக்கிறது.

வாக்குவாதம்..
மும்பையில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் ஒரு இளைஞர் தனது தோழியுடன் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார். அவர்கள் தாறுமாறாக சாலையில் போகவே, பின்னால் ஸ்கூட்டரில் வந்த இளைஞர் ஒருவர், "ஏன் இப்படி பொறுப்பில்லாமல் வண்டி ஓட்டுகிறீர்கள்" எனக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரே மிதி.. மொத்தமும் க்ளோஸ்
பின்னர் அவர்கள் தங்கள் வழியில் செல்ல, மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணோ தங்களை பார்த்து செல்லுமாறு கூறிய இளைஞரின் மோட்டார் சைக்கிளை மிதிக்கிறார். ஆனால் அடுத்த நொடியே இவர் நிலைத்தடுமாறி ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து தலைகுப்புற விழுகிறார். இதனை பின்னால் காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது தற்போது டிரெண்டாகி வருகிறது.

கலாய்க்கும் நெட்டிசன்கள்
இந்த வீடியோ தற்போது லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது. இதனை பார்த்த பலரும் அந்தப் பெண்ணை கலாய்த்து வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன், "தவறு செய்யும் ஒவ்வொருவருக்கும் இப்படி உடனடியாக கர்மா வேலை பார்த்தால், தவறுகள் பெருமளவு குறைந்துவிடும்" எனக் கூறியுள்ளார். இப்படி பலரும் அந்த இளம்பெண்ணை ட்ரோல் செய்து வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications