மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவிற்கு வந்துவிட்டது என்பிஏ லீக்.. மும்பையில் நடக்கும் அதிரிபுதிரி ஆட்டம்.. மாஸ் எதிர்பார்ப்பு

மும்பையில் முதல்முதலாக நடக்க உள்ள என்பிஏ பாஸ்கட் பால் போட்டி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மும்பை: மும்பையில் முதல்முதலாக நடக்க உள்ள என்பிஏ பாஸ்கட் பால் போட்டி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கான டிக்கெட் வேகமாக விற்பனை ஆகி வருகிறது.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹவுஸ்டன் நகரில் கடந்த சில நாட்கள் ஹவுடி மோடி விழா நடந்தது. பிரதமர் மோடி இந்த விழாவில் முன்னிலை வகித்தார்.

மொத்தம் 50000 இந்தியர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இதில் ஹவுடி மோடி விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். அமெரிக்காவில் நடந்த பிறநாட்டு பிரதமர்களின் விழாக்களில் இது மிகப்பெரிய விழாவாக பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் முழுக்க இந்த விழாதான் உலகம் முழுக்க தலைப்புச்செய்திகளில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப் நீண்ட நேரம் பேசினார். பல முக்கியமான அறிவிப்புகளை அவர் இதில் வெளியிட்டார். முக்கியமாக என்பிஏ பாஸ்கட் பால் போட்டி குறித்தும் டிரம்ப் இதில் பேசினார்.

அவர் தனது பேச்சில், இந்தியாவில் மிக விரைவில் அமெரிக்காவின் இன்னொரு தயாரிப்பு களமிறக்கப்பட உள்ளது. அமெரிக்காவில் பிரபலமான என்பிஏ பாஸ்கட் பால் போட்டி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் . கேட்கவே நன்றாக இருக்கிறது அல்லவா?

அடுத்த வாரம் மும்பையில் இந்த விழா நடக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் கலந்து கொள்பவர்கள். பிரதமர் மோடி, நீங்கள் என்னை அழைப்பீர்கள் தானே? நான் வரலாமா? கவனமாக இருங்கள்.. திடீர் என்று நான் வந்தாலும் வருவேன் என்று என்று டிரம்ப் கூறி இருந்தார். இதன் மூலம் இந்தியாவில் பாஸ்கட் பால் ஆர்வலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.

ஆம் வரும் அக்டோபர் 4ம் தேதி மற்றும் 5ம் தேதி மும்பையில் அடுத்தடுத்து என்பிஏ பாஸ்கட் பால் போட்டிகள் நடக்க உள்ளது. சக்ரமென்டோ கிங் மற்றும் இந்தியானா பேசர்ஸ் இடையிலான போட்டி மும்பையில் உள்ள என்சிஎஸ்ஐ டோம் மைதானத்தில் நடக்க உள்ளது.

அதேபோல் இந்த என்பிஏ பாஸ்கட் பால் போட்டி தொடங்கும் முன் அதற்கான பயிற்சி ஆட்டங்களும் நடக்க உள்ளது. இந்த வருட பாரம்பரிய என்பிஏ பாஸ்கட் பால் சீசன் அக்டோபர் 22ம் தேதி துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் சக்ரமென்டோ கிங் அணி மும்பைக்கு மிகவும் நெருக்கமானது ஆகும். இதன் ஓனர்களின் ஒருவரான விவேக் ராணாடிவ் மும்பையை சேர்ந்தவர். இந்த அணியில் டி'ஆரோன் பாக்ஸ், பட்டி ஹெய்ல்ட் மற்றும் 2018ல் இந்த தொடரில் கலக்கிய மார்வின் பாக்ளே 111 ஆகியோர் இருக்கிறார்கள்.

மேலும் இந்தியானா பேசர்ஸ் அணியில் வலுவான லிதுனியன் பேணோம், டொமான்டஸ் சபோனிஸ், மைல்ஸ் டர்னர், புதியவரான மால்கம் பிராக்டன் ஆகியோர் இருக்கிறார்கள்.

2018ல் டிசம்பர் மாதம் இது தொடர்பாக அறிவிப்பு வந்ததில் இருந்தே என்பிஏ பாஸ்கட் பால் (National Basketball Association) எப்போது தங்கள் மண்ணில் நடக்கும் என்று இந்திய மக்கள் பலர் காத்துக் கொண்டு இருந்தனர். தற்போது அது நிறைவேறும் நிலை உருவாகி உள்ளது.

இந்தியாவில் இந்த நிகழ்ச்சி டென் 1 மற்றும் டென் 3 ஆகிய சேனல்களில் அக்டோபர் 4 மற்றும் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும். இதை நீங்கள் நேரில் பார்க்க விரும்பினால் ஆன்லைனில் டிக்கெட் வாங்கி பார்க்க முடியும், இப்போதே இதன் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனை ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்க இந்த பக்கத்தை கிளிக் செய்யவும்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X