மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாக்டர் சீட்டுடன் வாங்க.. ஆக்ஸிஜன் சிலிண்டரை ஃப்ரீயா எடுத்துட்டு போங்க.. அசத்தும் மும்பை இளைஞர்கள்!

Google Oneindia Tamil News

மும்பை: இலவச ஆக்ஸிஜன் விநியோக திட்டத்தை மும்பையில் தொடங்கி தொடர்ந்து உயிர் காக்கும் செயலில் ஈடுபட்டுள்ள இளைஞருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

கொரோனா வைரஸ் முதல் அலை கடந்த ஆண்டு இந்தியாவை பாடாய்படுத்தியது. கொரோனா நோயால் பாதிக்கப்படும் வயதானவர்களுக்கு மூச்சுத்திணறல் பிரச்சினை ஏற்படுகிறது. இதற்காக அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது

மலை ரயில் ரத்து.. களையிழந்த உதகை.. ஆனா இவங்கெல்லாம் ஊட்டிக்கு போகலாமாம்.. யாருனு தெரியுமா? .

இதெல்லாம் ஆரம்பக் கட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகள் இருந்த நிலையில் சாத்தியமாக இருந்தது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கை பெருக பெருக ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவியது.

முயற்சி

முயற்சி

இதையடுத்து மும்பை மால்வாணியை சேர்ந்த ஷாநவாஸ் ஷைக் என்பவர் இலவச ஆக்ஸிஜன் திட்டத்தை தொடங்கி வைத்தார். தற்போதும் அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து அப்பாஸ் ரிஸ்வி என்பவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவசர நேரம்

அவசர நேரம்

இவர்கள் இருவரும் கொரோனா முன்கள போராளிகளாகிவிட்டனர். அவசர நேரங்களில் நோயாளிகளுக்கு உதவி வருகிறார்கள். சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் இலவச ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொடுத்து வருகிறார்கள்.

ஆக்ஸிஜன்

ஆக்ஸிஜன்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் போதும் இவர்கள் ஆக்ஸிஜன் சிலிண்டரை கொடுத்து விடுகிறார்கள். ஆக்ஸிஜன் தேவைகளுக்காக தனது காரை விற்று அதில் கிடைத்த பணத்தின் மூலம் ஆக்ஸிஜனை பெற்று இலவசமாக விநியோகம் செய்து வருகிறார்கள்.

துயர்

துயர்

இதுகுறித்து அப்பாஸ் கூறுகையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த எனது உறவினர் ஒருவர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துவிட்டார். அப்போதுதான் ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் எந்த மாதிரியான துயரத்தை அடைகிறார்கள் என்பதை புரிந்து கொண்டோம் என்றார். முதல் அலையில் தொடங்கிய இவர்களது பணி இரண்டாவது அலையிலும் தொடர்கிறது.

English summary
Mumbai man free oxygen supply scheme for life saving.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X