மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐந்து நட்சத்திர ஓட்டலின் சாதாரண பிரிட்ஜில் கோவிட் வேக்சின்.. கண்டுபிடித்து ஷாக் ஆன மும்பை மேயர்!

Google Oneindia Tamil News

மும்பை: கோவிட் வேக்சினை ஐந்து நட்சத்திர ஓட்டல் ஒன்று நார்மல் பிரிட்ஜில் வைத்து மக்களுக்கு போட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்த மும்பை மேயர், இப்படி வைப்பதிருப்பது மிகவும் தவ்று என்றும், இப்படி போடுவது ஆபத்தானது என்றும் எச்சரித்தார். மேலும் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

மும்பையில் புறநகர் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலான தி லலித்தில் பாதுகாப்பற்ற முறையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் ஞாயிற்றுக்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

Mumbai Mayor Kishori Pednekar found Covid-19 vaccines stored in a normal fridge at five-star hotel

அங்கு சென்று பார்த்த மேயருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஐந்து நட்சத்திர ஓட்டலில் தடுப்பூசிகள் சாதாரண பிரிட்ஜில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் அவர், உடனே அவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார்.

மும்பையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கே தடுப்பூசி கிடைக்காத போது, இவர்களுக்கு தடுப்பூசி எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்பினார். மேலும் சாதாரண பிரிட்ஜில் தடுப்பூசியை வைத்து பயன்படுத்துவது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்ததுடன் அதனை சீல் வைத்து மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்க உத்தரவிட்டார்.

அப்போது தான் குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலில், பிரபல தனியார் மருத்துவமனை ஒன்று தடுப்பூசி முகாமிற்காக மத்திய அரசிடமிருந்து உரிமம் பெற்றிருந்திருப்பதும், மே 23 முதல் அதை நடத்தி வருவதும் மேயருக்கு (விசாரணைக்கு பின்னர்) தெரியவந்தது. இதையடுத்து மேயர் கிஷோரி பெட்னகர், "தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து நட்சத்திர ஓட்டல்கள் தடுப்பூசி இயக்கத்தை மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி இருந்தால், குறைந்தபட்சம் மும்பை மாநகராட்சியுன் இணைந்து செயல்படுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

கொரோனா வேக்சின். பயன்படுத்தப்பட்டு வரும் சேமிப்பு வசதி நல்லதல்ல. பலருக்கு ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது ஆபத்தானது மற்றும் விசாரிக்க வேண்டும். ஹோட்டலைக் குறை கூறக்கூடாது. கோவிட் -19 தடுப்பூசிகளின் குளிர் சேமிப்பு குறித்து வழிகாட்டுல்களை கடைபிடிக்க மருத்துவமனை தவறிவிட்டது என்றார்

English summary
mumbai Mayor Kishori Pednekar said on Sunday that she would probe how a vaccination drive was being carried out at The Lalit, a five-star hotel in suburban Mumbai. The BMC was never made aware of such a drive, she claimed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X