மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மும்பையில் கோவாக்சினுக்கு பற்றாக்குறை.. 2ஆம் டோஸை எடுத்துக்கொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி

Google Oneindia Tamil News

மும்பை: இன்று இரண்டாம் நாளாக மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படாததால், 2ஆம் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் சரியான காலத்தில் எடுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

நாட்டில் தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசியைச் செலுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகத் தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தொடங்கவில்லை.

Mumbaikars Fume as Vaccination Centres Run Short of Covaxin Doses for Second Consecutive Day

குறிப்பாக மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளன. இதனால் அம்மாநில தலைநகர் மும்பையில் சில நாட்கள் தடுப்பூசி செலுத்தும் பணிகளே முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் கொரோனா தடுப்பூசி 2ஆம் டோஸ் எடுக்க வேண்டியவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று முதல் மும்பையில் 105 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும், கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே இன்று மும்பையிலுள்ள மையங்களில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து 2ஆவது நாளாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவில்லை.

செம ஷாக்.. ஒரே மருத்துவமனையில்... 80 மருத்துவர்களுக்கு கொரோனா... அறுவை சிகிச்சை நிபுணர் பலியான சோகம்செம ஷாக்.. ஒரே மருத்துவமனையில்... 80 மருத்துவர்களுக்கு கொரோனா... அறுவை சிகிச்சை நிபுணர் பலியான சோகம்

இதனால் கோவாக்சின் 2ஆம் டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டியவர்கள் சரியான காலத்தில் எடுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மும்பை மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் படி, கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களை 4 முதல் 8 வார இடைவெளியிலும், கோவாக்சின் தடுப்பூசி டோஸ்களை 4 முதல் 6 வார இடைவெளியிலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Covaxin Doses not administer for Second Consecutive Day due to shortage.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X