மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'வழுக்கைக்கு நோ' புல் ஷேவ் செய்யனும்.. மத கயிறுகள் கூடாது.. ஏர் இந்தியா போடும் புது கண்டிஷன்

Google Oneindia Tamil News

மும்பை: ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் விமானங்களில் பணிபுரிந்து வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மணிக்கட்டு, கழுத்து, கணுக்காலில் மத வழக்கப்படி கயிறுகள் கட்டக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என கூறப்படுகிறது.

பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா பெரும் நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதையடுத்து, ஏர் இந்தியவை தனியாரிடம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தை முதலில் ஆரம்பித்த டாடா குழுமமே மீண்டும் ஏர் இந்தி்யாவை கையகப்படுத்தியது.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.. ஆஸ்திரேலியா போட்ட கோடு.. ரோடு போடும் இந்தியா.. சர்வதேச அளவில் மாஸ்! தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.. ஆஸ்திரேலியா போட்ட கோடு.. ரோடு போடும் இந்தியா.. சர்வதேச அளவில் மாஸ்!

ஆடை முதல் ஆபரணங்கள் வரை

ஆடை முதல் ஆபரணங்கள் வரை

ஏர் இந்தியா பெருத்த நஷ்டத்தில் இயங்கி வந்ததால், அதில் புதுமைகளை புகுத்தி பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் எடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது தனது விமான ஊழியர்களின் மிடுக்கான தோற்றத்திற்காக பல்வேறு மாற்றங்களை ஏர் இந்தியா அமல்படுத்தியிருக்கிறது. விமானத்தில் பணியாற்றும் ஆண், பெண் ஊழியர்கள் அணியும் ஆடை முதல் கொண்டு அவர்கள் ஆபரணங்கள் வரை எந்த மாதிரியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வெளியிட்டு இருப்பதாகவும்.. இது தொடர்பாக பணியாளர்களுக்கு கையேடு வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வழுக்கை திட்டு திட்டாக இருந்தால்..

வழுக்கை திட்டு திட்டாக இருந்தால்..

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள இந்த புதிய உத்தரவுகள் பணியாளர்கள் பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்து இருக்கிறதாம். அதாவது ஆண் ஊழியர்களை பொருத்தவரை, வழுக்கை திட்டு திட்டாக இருந்தால் முழுமையாக தலையில் ஷேவ் செய்து மொட்டையடித்து இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தலையில் கண்டிப்பாக ஹேர் ஜெல் தடவியிருக்க வேண்டும். டை அடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இயல்பான கலரில் டை அடிக்க வேண்டும். மத வழக்கப்படி அணியப்படும் கயிறுகளை கட்டக்கூடாது என்பன போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

 கொண்டை கட்டக்கூடாது

கொண்டை கட்டக்கூடாது

அதேபோல், பெண் பணியாளர்களுக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது. பெண் பணியாளர்கள், காதில் தங்கம் அல்லது சாதாரண கம்மல்களை அணியலாம். முத்துக் காதணிகளை அணியக்கூடாது. தலைமுடியை பொறுத்தவரை லோபேன் கொண்டை கட்டக்கூடாது. மோதிரம் ஒரு செ.மீட்டர் அகலத்திற்கு மேல் இருக்கூடாது. மணிக்கட்டு, கழுத்து, கணுக்காலில் மதவழக்கப்படியிலான கயிறுகள் கட்டக்கூடாது.

புடவைகள் அணியலாம்

புடவைகள் அணியலாம்

விமான பணிப்பெண்களை பொறுத்தவரை புடவைகள் அணியலாம். மேற்கத்திய உடைகளையும் உடுத்தலாம். பணியில் இல்லாத நேரத்தில் சீருடையுடன் இருக்கக் கூடாது. பொட்டுக்களை அரை செ.மீட்டர் விட்டத்தில் தான் வைக்க வேண்டும். ஐஷேடோ, நெயில் பாலிஷ், லிப்ஸ்டிக் போன்றவற்றை பயன்படுத்தி வர வேண்டும். நடையும் மிடுக்காக இருக்க வேண்டும். அவசரகதியில் வேகமாக நடக்கக் கூடாது. தலையை நேராக நிமர்த்தியபடி நடக்க வேண்டும். இது போன்ற பல கட்டுப்பாடுகளை ஏர் இந்தியா அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
Air India has imposed new restrictions on men and women working on flights. Accordingly, it has imposed various restrictions including not tying ropes on wrists, necks and ankles as per religious custom.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X