நிதின் கட்காரியை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்காங்க பாருங்க.. நீதிமன்றத்தில் முறையிட்ட அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: இ 20 பெட்ரோலுக்கு இந்தியா முழுக்க வாகன ஓட்டிகளிடையே எதிர்ப்பு உள்ளது. இந்த இ 20 பெட்ரோல், டீசல் காரணமாக என்ஜின் பாதிக்கப்படுவதாகவும், மைலேஜ் குறைவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்த பிரச்சனை நீர் பூத்த நெருப்பாக இருந்து வந்தது. அண்மையில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் பிரச்சனைக்காக டார்க்கெட் செய்து ராஜினாமா செய்ய வைத்தனர். அவரை தொடர்ந்து தற்போது நிதின் கட்காரியை தாக்கி வருகிறார்கள். இதனால் நிதின் கட்காரி பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளார். அவர் தன்னால் முடிந்த வழிகளில் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வியூகம் அமைத்துள்ளார். அந்த வகையில், உயர்நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வாகனங்களில் எரிபொருளாக எத்தனாலைப் பயன்படுத்த வேண்டும் குரல் கொடுத்து வருகிறார். அவரது யோசனைப்படி தான் பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனாலை குறிப்பிட்ட அளவு கலந்து பயன்படுத்தும் முறை நடந்து வருகிறது.

Nitin Gadkari has approached Bombay High Court against-social media posts linking him

கரும்பு, மக்காசோளம் விவசாயிகளுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் நிதின் கட்காரி , தனது சுயலாபத்திற்காகத்தான் எத்தனால் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருவதாக சமூக வலைதளங்களில் டீப் பேக் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பரப்பி வருகிறார்கள். நிதின் கட்காரியின் மகன்கள் எத்தனால் தொழிலில் ஈடுபட்டு இருப்பதால் எத்தனால் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதாக விமர்சித்து வருகிறார்கள்.

கச்சா எண்ணெய்யை விட எத்தனால் விலை இந்தியாவில் அதிகமாக விற்கப்படுவதாகவும், அதற்கு நிதின் கட்காரி தான் காரணம் என்று சமூக வலைதளங்களில் தீவிரமாக விமர்சித்து வருகிறார்கள். இதனால் மக்கள் நிதின் கட்காரி தான் காரணமா என்று கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நிதின் கட்காரி, இந்த பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, தற்போது டீப் பேக் வீடியோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

முன்னதாக நிதின் கட்கரி கூறும் போது, எத்தனால் கலப்பு திட்டத்தை முன்னெடுத்ததில் எனக்கு தனிப்பட்ட ஆதாயம் மற்றும் நலன்கள் கிடையாது.. வாகனங்களால் ஏற்படும் மாசைக் குறைக்கவும், நாட்டின் இறக்குமதிச் செலவை மிச்சப்படுத்த வேண்டும் என்று நினைத்துதான் எத்தனாலை ஆதரித்து வருகிறேன். எனவே என்னை பற்றி பரவும் குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றார். ஆனாலும் நிதின் கட்காரியின் பேச்சை நெட்டிசன்கள் ஏற்கவில்லை..

இத்தனைக்கும் நிதின் கட்காரிக்கும், இ 20 பெட்ரோல், டீசலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. அவரது துறை சாலை மற்றும் போக்குவரத்து துறை, பெட்ரோலிய துறை அமைச்சர் வேறுநபர். ஆனால் நிதின் கட்காரி தான் பிரச்சனையில் சிக்கி உள்ளார். அவருக்கு எதிராக டெல்லியில் வரும் 4ம் தேதி நாடாளுமன்றத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளார்கள்.

இந்த சூழலில், நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த நிதின் கட்காரி, வணிக ஆதாயங்களுடன் தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகளுக்கு எதிராக, மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

பம்பாய் உயர் நீதிமன்றத்தில் நிதின் கட்கரி தாக்கல் செய்துள்ள வழக்கின்படி," E20 எத்தனால் கலப்புத் திட்டத்தின் மூலம் கிடைக்கும் லாபத்துடன் தன்னையும் தனது குடும்பத்தினரையும் தொடர்புபடுத்தும் வகையிலான பதிவுகள், 'டீப்ஃபேக்' படங்கள் மற்றும் காணொளிகள் பரவி வருகிறது. எத்தனால் கலப்புக் கொள்கையானது பெட்ரோலியத் துறையினால் நிர்வகிக்கப்படுகிறது . ஆனால் என் மீதே குற்றச்சாட்டுகளை தவறாக முன்னெடுக்கிறார்கள். என் மீதும், என் குடும்பத்தினருக்கு எதிராகவும் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். மெட்டா மற்றும் பிற சமூக ஊடகத் தளங்கள், அத்துடன் அடையாளம் தெரியாத தரப்பினருக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று நிதின் கட்காரி கூறினார். இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றம் அவர்கள் மீது வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+