மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆஹா.. நீ எப்படிப்பா இங்கே வந்த.. மும்பை விமானத்தை அலற வைத்த ஆந்தை!

மும்பை விமானத்தில் இருந்த ஆந்தையை கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Owl in Jet Airways | மும்பை விமானத்தை அலற வைத்த ஆந்தை!

    மும்பை: ஃபிளைட்டிற்குள் அவசர அவசரமாக ஏறிய பைலட்டுக்கு ஒரே ஷாக்தான்!! ஆந்தை மாதிரியே யாரோ தன்னை முட்டை கண்ணால் முறைத்து முறைத்து பார்க்கிறார்கள் என்று, கிட்டபோய் பார்த்தால் அது சாட்சாத் ஒரிஜினல் ஆந்தையேதான் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருந்தது!!

    மும்பை ஏர்போர்ட்டில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 விமானம் ஒன்று சிங்கப்பூர்- லண்டன் செல்வதற்காக கிளம்ப தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

    விமானத்திற்குள் காலை ஊழியர்கள் சென்றனர். விமானிகள் தங்கும் அறையில் உள்ள கமாண்டர் இருக்கையில் ஒரு ஆந்தை நின்று கொண்டிருந்தது.

    இதய வடிவம்

    இதய வடிவம்

    அது பார்ன் (Barn) எனும் இனத்தை சேர்ந்த ஆந்தையாம். இந்த வகை ஆந்தைக்குதான் தலை இதயம் வடிவில் இருக்குமாம்.

    கண்களை உருட்டியது

    கண்களை உருட்டியது

    இதை பார்த்ததும் ஊழியர்கள் அதிர்ந்து போய், உடனடியாக விமான நிலைய தீயணைப்பு துறையினரிடம் தகவல் சொல்லவும், அவர்கள் விரைந்து வந்தனர். பைலட் உட்காரும் இடமான காக்பிட் என்ற இடத்தில் அந்த ஆந்தை கண்களை உருட்டி கொண்டிருந்தது.

    பறக்க விட்டார்கள்

    பறக்க விட்டார்கள்

    பிறகு ஊழியர்கள், ஆந்தையை சாமர்த்தியமாக பிடித்து பறக்க விட்டு விட்டார்கள். எப்படி ஃபிளைட்டுக்குள் ஆந்தை வந்திருக்கும் என தெரியவில்லை. எப்படி இருந்தாலும் பகலில் வர கண்ணு தெரிந்திருக்காது. அதனால் இரவில் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம்தான் வந்திருக்கும் என சொல்லப்படுகிறது.

    ஏர்போர்ட் விளக்கம்

    ஏர்போர்ட் விளக்கம்

    விமானத்தின் ஒரு கதவு திறந்து இருந்ததாகவும், அதன் மூலம் ஆந்தை உள்ளே சென்று இருக்கலாம் என மும்பை ஏர்போர்ட் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆந்தையை மட்டும் யாரும் பார்க்காவிட்டால், கிட்டத்தட்ட 14 மணி நேரம் ஃபிளைட்டிலேயே டிராவல் செய்திருக்கும்!!

    English summary
    Owl enters cockpit of Jet Airways aircraft at Mumbai Airport
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X