போட்டோ எடுக்காதீங்க ப்ளீஸ்.. ராகுல் காந்தி - அதானி திடீர் சந்திப்பு.. கைக்குலுக்கி பேசியதன் பின்னணி

Subscribe to Oneindia Tamil

மும்பை: லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் காந்தி தொடர்ந்து பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வருகிறார். குறிப்பாக தொழிலதிபர் கவுதம் அதானி பலனடையும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில் தான் அதானியும், ராகுல் காந்தியும் நேருக்கு நேர் சந்தித்து கைக்குலுக்கி உள்ளனர். விமர்சனங்கள் வரும் என்பதால் போட்டோ எடுக்கப்படாத நிலையில் அதன் பின்னணி குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

நம் நாட்டின் மூத்த அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவராக இருப்பவர் சரத் பவார். மகாராஷ்டிராவை சேர்ந்தவர். முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கினார்.

rahul gandhi gautam adani

இப்போது சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவார் வசம் உள்ளது. சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அணியாக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் டிசம்பர் 12ம் தேதி சரத்பவார் தனது பிறந்தநாளை கொண்டாடினர். இதையடுத்து அவர் தனது பிறந்தநாள் விழாவுக்கு அரசியல்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்களை அழைத்தார். அந்த வகையில் பிறந்தநாள் விழாவுக்கு தொழிலதிபர் கவுதம் அதானி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் சென்றனர்.

இந்த விழாவில் கவுதம் அதானி - ராகுல் காந்தி ஆகியோர் நேருக்கு நேர் சந்தித்து கொண்டனர். அதன்பிறகு இருவரும் கைக்குலுக்கி பேசியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இருவரின் சந்திப்பு தொடர்பான போட்டோ வெளியாகவில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றம் மட்டுமின்றி தேர்தல் பிரசாரங்களில் பிரதமர் மோடி, கவுதம் அதானிக்கு உதவும் வகையில் செயல்படுவதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இப்படியான சூழலில் இந்த சந்திப்பு தொடர்பான போட்டோ வெளியானதால் அது விவாதத்தை கிளப்பும் என்பதால் போட்டோ எடுக்கப்படவில்லை. ராகுல் காந்தி - கவுதம் அதானி சந்தித்தபோது யாரும் போட்டோ எடுக்க வேண்டாம் என்று சரத்பவாரின் மகளும், எம்பியுமான சுப்ரியா சூலே தடுத்துள்ளார். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆதேஷ் ராவல் கூறுகையில், ‛‛ராகுல் காந்தி - கவுதம் அதானி சந்திப்பின்போது யாரும் போட்டோ எடுக்க வேண்டாம் என்று சுப்ரியா சூலே தடுத்தார்'' என்று கூறியுள்ளார்

அதேவேளையில் சரத்பவார் பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டவர்கள் சரத் பவாருடன் சேர்ந்து இருக்கும் போட்டோக்கள் வெளியாகின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+