மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்ம இந்திராணியை அடச்சு வச்சிருந்தாங்கல்ல.. அதே ஜெயில்லதான் ரியாவையும் வச்சிருக்காங்களாம்!

Google Oneindia Tamil News

மும்பை: போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ரியா சக்கரவர்த்தி மும்பையில் உள்ள பைகுல்லா பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சிறையில் தான் ஷீனா போரா கொலை வழக்கு குற்றவாளியான இந்திராணி முகர்ஜியும் அடைக்கப்பட்டுள்ளார்.

போதை பொருள் பதுக்கி வைத்திருந்ததாக நடிகை ரியா சக்கரவர்த்தி பலகட்ட விசாரணைகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். அவரை பைகுல்லா சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதன் பேரில் அவர் நேற்றைய தினம் அந்த சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சிறையில் சாதாரண அறையில் ரியா அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறை துறை மருத்துவர் உடல் பரிசோதனை செய்தார். அவருக்கு தேவையான பொருட்கள் ஒரு சிறிய பாலித்தீன் கவரில் போட்டு கொடுக்கப்பட்டது.

அரியலூரில் அன்று பலியான அனிதா... இன்று விக்னேஷ் - தொடர்கதையாகும் நீட் தற்கொலைகள் அரியலூரில் அன்று பலியான அனிதா... இன்று விக்னேஷ் - தொடர்கதையாகும் நீட் தற்கொலைகள்

கம்பளி

கம்பளி

அந்த பையில் துணிகள், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை இருந்தன. இந்த சிறையில் 6 அறைகள் இருக்கும் ஒவ்வொரு அறையிலும் 40 முதல் 50 பேர் வரை அடைக்கப்படுவார்கள். சிறையில் அடைக்கப்பட்ட ரியாவுக்கு சிறிய தலையணை, வெள்ளை நிற பெட்ஷீட், கம்பளி ஆகியவை வழங்கப்படும்.

ரியாவுக்கு

ரியாவுக்கு

தரையில்தான் படுக்க வேண்டும். ரியாவுக்கு தினமும் இரு சப்பாத்திகளும், ஒரு கப் சாதமும், பருப்பும், ஒரு காய்கறியும் வழங்கப்படும். சிறையில் ஒரு கேன்டீன் இருக்கிறது. இங்கு ரியா தனக்கு தேவையான பிஸ்கெட்டுகள் உள்ளிட்ட அன்றாட பயன்படுத்தப்படும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

இந்த சிறையில்தான் ஷீனா போரா கொலை வழக்கில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் இந்த சிறையில் இருந்து வரும் இந்திராணி, புதிதாக சிறைக்கு வருவோரை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

ஜாமீன்

ஜாமீன்

அந்த வகையில் அவர் ரியாவை சந்திப்பார் என தெரிகிறது. தன்னுடன் சிறையில் இருந்த மஞ்சுளா ஷேத் இறந்தவுடன் சிறையில் இந்திராணி போராட்டம் நடத்தினார். இந்த சிறையில் மொத்தம் 250 பெண் கைதிகள் உள்ளனர். விசாரணையின் போது ரியாவுடன் ஒரு பெண் காவலர் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவரது ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Rhea Chakraborty kept in Byculla Women's prison where Indrani Mukherjee is kept.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X