மகன் ஆர்யன் கானுடன் ஷாருக்கான் பிறந்த நாள் கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு வாட்டர், பிஸ்கெட் உபசரிப்பு
மும்பை: போதை மருந்து வழக்கில் மகன் ஆர்யன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று தனது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி உள்ளார் நடிகர் ஷாருக்கான்.
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கானுக்கு இன்று 56-வது வயது பிறக்கிறது. முன்னதாக, அக்டோபர் 2ம் தேதி அதாவது சரியாக ஒரு மாதத்துக்கு முன்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பை அருகே ஒரு சொகுசு கப்பலில் போதைமருந்து பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டார்.
மும்பையில் உள்ள சிறைச்சாலையில் ஆரியன் கான் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜாமீன் கிடைத்தது
இதையடுத்து இந்தியாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி, ஷாருக்கான் தரப்பில் ஆஜராகி வாதாடினார். சுமார் மூன்று நாட்கள் தொடர்ந்து வாதம் நடைபெற்ற நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்யன் கானை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சனிக்கிழமை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் ஆர்யன் கான்.

விழாக்கோலம்
இதையடுத்து ஷாருக்கான் வீடு அமைந்துள்ள மன்கட் விழாக்கோலம் புகுந்தது. இன்று ஷாருக்கான் பிறந்த நாள், வியாழக்கிழமை தீபாவளி, இதுபோன்ற தொடர் திருவிழாக்களுக்கு மத்தியில் தங்கள் மகன் தங்களோடு இருப்பதால் ஷாருக்கான் மற்றும் அவர் மனைவி கவுரி கான், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ரசிகர்களுக்கு பிஸ்கெட்
ஷாருக்கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக இன்று மன்கட் வீட்டுக்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடினர். அவர்கள் வாழ்த்து கோஷங்களை எழுப்பினர். தனது ரசிகர்கள் பசியோடு கஷ்டப்பட கூடாது என்பதற்காக, பிஸ்லரி வாட்டர் பாட்டில், இரண்டு பாக்கெட் பிஸ்கட் ஆகியவற்றை வீட்டுக்கு வெளியே அனுப்பி வைத்தார் ஷாருக்கான்.

நள்ளிரவிலேயே வந்த ரசிகர்கள்
முன்னதாக நேற்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் ரசிகர்கள் ஷாருக்கான் வீட்டுக்கு வெளியே வந்து குவிந்த வாழ்க கோஷம் எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனிடையே ஷாருக்கானுக்கு நடிகர்கள், நடிகைகள் மற்றும் பல பிரபலங்களும் ட்விட்டர் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவி்த்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக ரசிகர்களை ஷாருக்கான் நேரில் சந்திக்கவில்லை. கடந்த வருடமும் ரசிகர்களுடனான சந்திப்பை அவர் தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications