மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் ஆண்கள் அதிகம் பலியாக 'அதுதான்' காரணமாம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Google Oneindia Tamil News

மும்பை: கொரோனாவால் பெண்களைவிட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக இதுவரை வந்த ஆய்வு தகவல்கள் சொல்கின்றன. இந்நிலையில் கொரோனாவால் ஆண்கள் அதிகம் பலியாக விந்து பைகள் தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகின் கிட்டதட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி விட்டது . இதில் பேரழிவை சந்தித்த நாடுகள் என்றால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஈரான் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் அரபு நாடுகள் தான்.

இந்நிலையில் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் ஆண்களே அதிக அளவு பலியாகி உள்ளனர். ஆண்கள் இறப்பு விகிதம் 2.8 சதவீதமாகவும் பெண்களின் எண்ணிக்கை 1.7 சதவீதம் ஆக உள்ளது. இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 80 சதவீதம் பேர் ஆண்கள் என்றும 20 சதவீதம் பேர் பெண்கள் என்றும் ஆய்வுகள் சொல்கின்றன.

முடங்கிய கால்நடை சந்தைகள்... ஊரக பொருளாதார நிலையை சிதைத்த கொரோனா லாக்டவுன் முடங்கிய கால்நடை சந்தைகள்... ஊரக பொருளாதார நிலையை சிதைத்த கொரோனா லாக்டவுன்

ஐரோப்பா

ஐரோப்பா

இதேபோல் இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலும் ஆண்களே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கிறார்கள். இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஐரோப்பியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் அதிக குடிப்பழக்கம் இருப்பதால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்கிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

இதனிடையே இயற்கையிலேயே ஆண்களை விட பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. பெண்களின் மரபணு , ஹார்மோன்கள், குரோமோசோம்கள் போன்றவை காரணமாக எந்தவகையான வைரஸையும் எதிர்த்து போராட கூடிய ஆற்றல் பெண்களுக்கு உள்ளதாம். இதனால் தான் பெண்களை எந்த வைரசும் பெரிதாக பாதிப்பதில்லையாம்.

விந்து பைகள் காரணம்

விந்து பைகள் காரணம்

இந்நிலையில் மும்பையில் குணமடைந்த 68 நோயாளிகளிடம் ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. அந்த ஆய்வில் வெளியான தகவல்கள் கொஞ்சம் அதிர்ச்சி ரகம் தான். அதாவது ஆண்கள் அதிகம் பலியாகவும், நோய் குணமாக நீண்ட நாட்கள் ஆவதற்கும் விந்து பைகள் தான் காரணமாம். ஏசிஇ-2 எனப்படும் ஆஞ்சினேயோடென்சின் கன்வர்டிங் என்சைனம்-2 என்ற அதிக எண்ணிக்கையிலான புரதத்தை விந்து பைகள் அதிக அளவு உற்பத்தி செய்வதே நோய் தொற்றிலிருந்த குணமடைவதற்கு அதிக நாட்கள் ஆகிறதாம்.

ஆண்களை பாதிக்க காரணம்

ஆண்களை பாதிக்க காரணம்

இந்த ஏசிஇ-2 புரதத்தை தான் கொரோனா வைரஸ் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அதிக நாட்கள் உயிர் வாழ்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். பொதுவாகவே பெண்கள் உடலில் கொரேனா வைரஸ் 4 நாட்களில் அழிந்து விடுகிறது. ஆணகள் உடலில் அழிவதற்கு ஆறு நாட்கள் ஆகிறது. உடலின் மற்ற பாகங்களை விட விந்து பைகளில் தான் கொரோனா வைரஸ் அதிகமாக தங்குகிறதாம். இதற்கு இன்னொரு காரணமாக ஆய்வாளர்கள் சொல்வது, விந்து பைகள் நோய் எதிர்ப்பு மண்டலத்திருந்து பிரிந்து இருப்பது தான். எனவே கொரோனா வைரசின் தேக்க இடமாக விந்துபைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் சொன்னாலும், இந்த ஆய்வு இன்னமும் முழுயைமாக பகுப்பாய்வு செய்யப்படவில்லை. எனவே முழு ஆய்வு முடிந்தால் தான் உண்மை என்னவென்பது தெரியும். அதுவரை காத்திருப்போம்.

English summary
one report said that Sperm bags the most common cause of men die for coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X