ஜோத்பூர் ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டு விபத்து.. அதிகாலையில் அலறிய பயணிகள்.. உதவி எண்கள் அறிவிப்பு
மும்பை: மகராஷ்டிர மாநிலம் பாந்திரா ரயில் நிலையத்தில் இருந்து ஜோத்பூருக்கு சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. ரயிலின் ஸ்லீப்பர் கோச்சின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தற்போது வரை தகவல் இல்லை. ரயில்வே உயர் அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூருக்கு சூர்யனகரி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இயங்கி வருகிறது. இரண்டு முக்கிய நகரங்களுக்கு இடையே ஓடும் இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழியும்.
இந்த நிலையில் இன்று அதிகாலை ரயிலில் பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது திடீரென ரயில் பெட்டிகள் அதிர்ந்தன.

தடம்புரண்ட எக்ஸ்பிரஸ் ரயில்
அதோடு பயங்கர சத்தமும் கேட்டதால் பயணிகள் அச்சம் அடைந்தனர். ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டன. அதிகாலை 3.27 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. தற்போது வரை சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இல்லை. ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. உடனடியாக ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

11 பெட்டிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக
ஜெய்பூரில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வடக்கு ரயில்வேயின் பொது மேலாளர் உள்பட உயர் அதிகாரிகள் நிலமையை உன்னிப்பாக கணித்து வருகின்றனர். ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 11 பெட்டிகள் வரை பாதிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர். பயணிகளை பேருந்து மூலமாக அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதோடு உதவி எண்களையும் ரயில்வே அறிவித்துள்ளது.

உதவி எண்கள்
ஜோத்பூருக்கு 02912654979, 02912654993, 02912624125, 02912431646 என்ற எண்களையும் பலி மர்வாருக்கு 02932250324 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் பயணிகள் மற்றும் பயணிகளின் குடும்பத்தினர் தகவல் எதுவும் தேவைப்பட்டால் இந்த எண்ணை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு ரயில்வே தெரிவித்துள்ளது.

அதிர்வு சத்தங்கள் கேட்டது
ரயில்வே உயர் அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு வருகை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து பயணிகள் கூறுகையில், "ராஜஸ்தானின் மர்மார் சந்திப்பில் இருந்து ரயில் புறப்பட்ட 5 நிமிடங்களில் அதிர்வு சத்தங்கள் கேட்டது. அடுத்த 2-3 நிமிடங்களில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது ஏதோ விபரீதம் நடந்துவிட்டதை உணர்ந்த நாங்கள் இறங்கி சென்று பார்த்தோம். அதில் ரயிலின் 8 ஸ்லீப்பர் கோச் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு விலகி கிடந்தன. அடுத்த 15-20 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் நிகழ்விடத்திற்கு வந்து விட்டது" என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications