''எங்கள் உறவு முறிந்து விட்டதாக யார் சொன்னது?''.. பிரதமர் மோடியை சந்தித்தபின் உத்தவ் தாக்கரே பேட்டி!
மும்பை: அரசியல்ரீதியாக எங்கள் உறவு இணக்கம் இல்லாமல் இருந்தாலும், எங்கள் உறவு முடிந்து விடவில்லை என்று பிரதமர் மோடியை சந்தித்தபின் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறினார்.
பா.ஜ.கவும், சிவசேனாவும் மகாராஷ்டிராவில் நட்புக்குரிய கட்சிகளாக வலம் வந்தன. ஆனால் 2019 சட்டசபை தேர்தலுக்கு பிறகு எல்லாம் மாறி விட்டது.
2019 சட்டசபை தேர்தலில் பாஜகவும்-சிவசேனாவும் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்தன. ஆனால் தங்களுக்கு சுழற்சி முறையில் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று சிவசேனா கேட்டது.

சிவசேனா- பாஜக மோதல்
இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்ததால் இந்த கூட்டணி முறிந்தது. தேசியவாத காங்கிரஸ், காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியை பிடித்தது. சிவசேனா தலைவர் தாக்கரே முதல்வராக உள்ளார். தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் துணை முதல்வராக உள்ளார். கூட்டணியில் இருந்து விலகியது முதல் சிவசேனா, பாஜகவை வறுத்தெடுத்து வருகிறது.

பிரதமருடன் சந்திப்பு
மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களையும், பிரதமர் மோடியையும் சிவசேனா விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தலைநகர் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். துணை முதல்வர் அஜித் பவார், முன்னாள் முதல்வர் அசோக் சவாண் ஆகியோர் உடன் சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு உத்தவ் தாக்கரே பிரதமரை சந்தித்து இருப்பதால் பல்வேறு கருத்துக்கள் உலா வந்தன.
Recommended Video

மராத்தா இடஒதுக்கீடு
மகாராஷ்டிரா அரசு கொண்டு வந்த மராத்தா மக்களுக்கு, கல்வி, வேலைவாய்ப்புகளில் 16 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. எனவே மராத்தா மற்றும் ஓபிசி இட ஒதுக்கீடு, டவ் தே புயல் நிவாரண நடவடிக்கைகள் குறித்து உத்தவ் தாக்கரே பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்தி உள்ளார் என்று கூறப்படுகிறது.

உறவு முடிந்து விடவில்லை
பிரதமர் மோடியை சந்தித்த பிறகு நிருபர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, ''நான் மராத்தா இடஒதுக்கீடு பிரச்சினை, புயல் குறித்து பிரதரிடம் பேசினேன். அரசியல்ரீதியாக எங்கள் உறவு இணக்கம் இல்லாமல் இருக்கலாம். அதற்காக எங்களது உறவு முறிந்து விட்டது என்பது அர்த்தமா? நான் ஒன்றும் நவாஸ் ஷெரிப்பை சந்திக்க போகவில்லையே. பிரதமர் மோடியைத்தானே சந்தித்தேன். இதில் ஒன்றும் தவறு இல்லை'' என்று கூறினார்.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications