"சபலம்".. ஆடைகளை கழட்ட சொன்ன "நிர்வாண" பெண்.. கப்பலேறிய 57 வயது ஆபீசரின் மானம்.. கண்றாவி!
சபலத்தால் சிக்கி 2 லட்சம் ரூபாய் பணத்தையும் இழந்துள்ளார் ஒரு அதிகாரி
மும்பை: 57 வயது ஆபீசருக்கு, உச்சிக்கு ஏறிவிட்டது சபலம்.. கடைசியில் மானம் போனதுதான் மிச்சம்..!
தொழில்நுட்பம் பெருக பெருக, குற்றங்களும் பெருக ஆரம்பித்துவிட்டன.. வளர்ச்சி என்ற நோக்கில் விஞ்ஞானத்தை அணுகினாலும், அதனால் ஏற்படும் வன்முறைகளையும், தவறுகளையும் தடுக்க முடிவதில்லை.
சமீப காலமாகவே, பணம், நகைகளை பறிக்கும் மோசடி கும்பல்கள் ஆன்லைனில் வட்டமடித்து வருகிறார்கள்.. செல்போன்களை, யாராலுமே தவிர்க்க முடியாத பட்சத்தில் இதை தான் தங்களுக்கு சாதகமாக சிலர் பயன்படுத்தி நூதன கொள்ளைகளில் இறங்கி உள்ளனர்.

சைலேந்திரபாபு
நேற்றைய தினம், நம்முடைய டிஜிபி சைலேந்திரபாபு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார்.. "கடன் தருகிறோம்" என்று மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் விளம்பரம் செய்கின்றனர்.. அவர்கள் தெரிவிக்கும் ஆப்பை டவுன்லோடு செய்யும்போதே, செல்போனில் உள்ள நம்பர், உங்களின் போட்டோக்கள் உள்ளிட்ட விபரங்களை பெற்று விடுகின்றனர்... பிறகு, கடன் வாங்கியவரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து 'வாட்ஸ் ஆப்'பில் அனுப்பி பணம் பறிக்கிறார்கள்.. யாரிடமும் உங்களின் போட்டோக்களை பகிர வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

டிஜிபி வார்னிங்
தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்களும், மோசடி கும்பல்களும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்களை அலர்ட் செய்துள்ளது காவல்துறை.. மும்பையிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், பணம் பறித்து மிரட்டியது ஒரு கும்பல் இல்லை, ஒரே ஒரு பெண்.. அதுவும் ஆபாசமாக திட்டி, ஆண்களை விரட்டி விரட்டி பணம் பறிப்பவர்.. அங்கு இயங்கி வரும் ஒரு நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார் அந்த நபர்.. 57 வயதாகிறது.. இவருக்கு கடந்த சனிக்கிழமையன்று வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்துள்ளது.

வீடியோகால்
அதில், ஆபாச வீடியோ காலில் பேச விருப்பமா? என்று கேட்டுள்ளனர்.. இதை பார்த்ததுமே, அந்த அதிகாரிக்கு சபலம் வந்துவிட்டது.. உடனே, ஆமாம், ஆபாச வீடியோ கால் என்றால் விருப்பம்தான் என்று பதில் சொல்லி இருக்கிறார்.. உடனே அந்த அதிகாரிக்கு வீடியோ காலில் ஒரு பெண் வந்து நின்றுள்ளார்.. டிரஸ் இல்லாமல், நிர்வாணமாகவே நின்றுள்ளார் அந்த பெண்.. பிறகு, அந்த அதிகாரியையும் டிரஸ்களை கழற்றுமாறு சொல்லியிருக்கிறார்... ஏற்கனவே மண்டை நிறைய சபலத்தில் சிக்கியிருந்த அதிகாரியும், அந்த பெண் சொன்னது போலவே, தன் ஆடைகளை களைந்துள்ளார்.

ஆபாச வீடியோ
அதிகாரி நின்ற அந்த கோலத்தை, அந்த அப்படியே ரெக்கார்டு செய்து வைத்துவிட்டார்.. அதன்பிறகு, அடிக்கடி அந்த அதிகாரிக்கு போன் வந்துள்ளது.. அதிகாரியும் ஆபாச வீடியோ காலை பயன்படுத்தி உள்ளார்.. ஒருகட்டத்தில், தனக்கு அந்த வீடியோ கால் அழைப்பு தேவையில்லை என்று சொல்லி உள்ளார்.. அதற்கு அந்த பெண், "அப்படின்னா, நாங்கள் கேட்கும் பணத்தை தந்துவிடு.. இல்லாவிட்டால், இதுவரை எடுத்த மொத்த ஆபாச வீடியோக்களையும் எல்லாருக்கும் அனுப்பி விடுவோம்" என்று அந்த பெண் மிரட்டி உள்ளார்.

நிர்வாணமாக நின்ற பெண்
அடுத்த கொஞ்ச நேரத்தில், யாரோ ஒரு நபர், அதிகாரிக்கு போன் செய்துள்ளார்.. தான் ஒரு டெல்லி போலீஸ் எனவும், ஆபாச வீடியோவில் நிர்வாணமாக நின்றாயா? என்றும் கேட்டுள்ளார்.. இதைக் கேட்டதும் அதிகாரிக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.. அந்த வீடியோக்களை வெளியே விடாமல் இருக்க வேண்டுமானால், பணம் வேண்டும் என்று மிரட்டி உள்ளார்.. பயந்துபோன அதிகாரியும், 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் அனுப்பி வைத்திருக்கிறார்..

ஆபீசர் நிலைமை?
அப்போதும் அந்த கும்பல் அடங்காமல், மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளது.. தினமும் மன உளைச்சலுக்கு ஆளான அதிகாரி, வேறு வழியின்றி போலீசுக்கு போனார்.. புகாரை தந்துள்ளார்.. அந்த பெண் தனி நபர் இல்லை.. அவருக்கு பின்னால் ஒரு கும்பலே இருக்கிறது என்றும், இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.. இதையடுத்து போலீசார், ஆபாச மோசடி கும்பலை பிடிக்க களமிறங்கி உள்ளனராம்.. 57 வயது ஆபீசருக்கு இதெல்லாம் தேவையா?!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications