மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாவம் சந்திரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்? சிவசேனா கிண்டல்

Google Oneindia Tamil News

மும்பை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஏன் குறுக்கும், மறுக்குமாக ஓடிக்கொண்டுள்ளார் என கிண்டல் செய்துள்ளது சிவசேனா.

தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமாந சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, ஆட்சியமைக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இந்த விஷயமாக இரு முறை சந்தித்து பேசிய சந்திரபாபு நாயுடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Why Chandrababu Naidu is exhausting himself without any reason? asks Shiv Sena

இதன்பிறகு, உத்தரபிரதேசம் சென்று, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை, சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் சுதாகர் ரெட்டி, லோக்தந்த்ரிக் ஜனதாதளம் தலைவர் சரத் யாதவையும் சந்தித்தார். திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியையும் அவர் இன்று சந்தித்தார்.

தமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு! தமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு!

இதனிடையே, சிவசேனா கட்சி நாளிதழ் 'சாம்னா' சந்திரபாபு நாயுடுவை கிண்டல் செய்து ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், எதிர்க்கட்சிகளில் 5 பிரதமர் வேட்பாளர்களாகவது இருக்கிறார்கள். யார்தான் ஆட்சியமைப்பார்கள். ஆனால் இதற்கான விடை ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டது.

300க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கூட்டணி வெல்லும் என அமித்ஷா சொல்லிவிட்டார். அப்படியிருக்கும்போது, சந்திரபாபு நாயுடு ஏன் சமந்தம் இல்லாமல் உணர்ச்சிவசப்பட்டு ஓடிக்கொண்டுள்ளார். மே 23ம் தேதியோடு அவரது இந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். இதற்காக அவருக்கு வாழ்த்துக்கள். இவ்வாறு சாம்னா கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
"Why Chandrababu Naidu is exhausting himself without any reason? Hope his current excitement last till May 23. We wish him luck for the same," the Shiv Sena said in an editorial in its mouthpiece Saamana.23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X