இளைஞர்களுக்கு கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்கல.. பாஜக ஆட்சியில் ரொம்ப மோசம்.. சரத் பவார் கவலை!
மும்பை : நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை, திருமணத்திற்கு பெண்ணும் கிடைக்கவில்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் உள்ளனர், நாட்டில் படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கும் போது பாஜக இரு மதங்களுக்கு இடையே வெறுப்பை தூண்டி அரசியல் செய்கிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மத்திய பாஜக அரசை விமர்சித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜன் ஜகர் யாத்ரா என்ற நடைபயணத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளுக்கு பாஜக அரசு தான் பொறுப்பு என குற்றம்சாட்டினார்.
மேலும், மதம், சாதி பெயரில் இரு சமூகத்தினருக்கு இடையே சண்டையை மூட்டி விடுகிறது மத்திய பாஜக அரசு என்றும் சரத் பவார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சரத் பவார்
கடந்த 2 நாட்களுக்கு முன் மகாராஷ்டிரா சென்ற பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, வரும் 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு 'மகாராஷ்டிரா மிஷன் 45' என்ற கோஷத்தை முன்வைத்து பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில் மகாராஷ்டிராவில் ஜன் ஜகர் யாத்ராவை தொடங்கி வைத்துப் பேசிய தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், பாஜக ஆட்சியில் நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு பெண் கிடைக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

நட்டாவுக்கு நினைவிருக்கட்டும்
சரத் பவார் பேசுகையில், "மகாராஷ்டிராவில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஆனால் பாஜக மிஷன் 45 என்று கோஷங்களை எழுப்புகிறது. ஜேபி நட்டாவின் சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில், பாஜக தோற்றதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். நாட்டின் வேலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளதால், அது சமூகப் பிரச்சனையாக உருவாகிறது. இன்றைய இளைஞர்கள் படித்தவர்கள். அவர்களுக்கு வேலை கேட்கும் உரிமை உள்ளது.

இளைஞர்களிடம் விசாரித்தேன்
சுற்றுப் பயணங்களின்போது கிராமங்களை பார்வையிடுவது எனது வழக்கம். ஒருமுறை பயணத்தின் போது ஒரு கிராமத்திற்குச் சென்று இருந்தேன். அப்போது 25 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் 15-20 வேலைக்குச் செல்லாமல் அரட்டையடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசினேன். அவர்களில் பலர் பட்டதாரிகள், சிலர் முதுநிலை பட்டதாரிகள். ஆனால் அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. வேலை இல்லாததால் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை என கூறினர். இது அந்த கிராமத்தில் மட்டுமல்ல, எல்லா மாநிலங்களிலும் இதே நிலைதான்.

பிளவை உண்டாக்கும் பாஜக
வேலை கிடைக்காததால், பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். வேலையில்லாத நபர்களுக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அவர்களுக்கு வேலை கொடுப்பது, சுய தொழிலுக்கு ஊக்குவிப்பது என்று இந்த பாஜக அரசு செயல்படாமல் மதம், சாதி என்ற பெயரில் சமூகங்களுக்கிடையில் பிளவை உருவாக்கி வருகிறது. நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறது.

வெறுப்பு அரசியல்
மகாராஷ்டிராவை தொழில் நிறுவனங்கள் வெளியேறுகின்றன. தற்போதுள்ள தொழிற்சாலைகளுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்படவில்லை. வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், புதிய தொழிற்சாலைகளையும் உருவாக்கவில்லை. தேர்தல் நேரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் இவ்வாறு பாஜக வெறுப்பு அரசியலை செய்து வருகிறது" என விமர்சித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications