தொகுதி மாறும் ஷா நவாஸ்.. நாகையில் நேரடியாக களமிறங்கும் திமுக.. வேட்பாளர் லிஸ்டில் உள்ள 2 பேர் யார்?
நாகை: 2026 சட்டசபைத் தேர்தலில் நாகை தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விசிக நிர்வாகி ஆளூர் ஷா நவாஸ் எம்எல்ஏவாக செயல்பட்டு வரும் சூழலில், இந்த தேர்தலில் அவர் தொகுதி மாற உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இன்னும் விவரமாக பார்க்கலாம்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள் சார்பாக போட்டியிட அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர். அந்த வகையில் நாகை தொகுதியை பொறுத்தவரை அதிமுக தரப்பில் தங்க.கதிரவன் வேட்பாளர் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதையடுத்து தொகுதியில் வீடுதோறும் நோட்டீஸ் கொடுத்து பம்பரமாக செயல்பட்டு வருகிறார்.

தொகுதி மாறும் ஷா நவாஸ்?
இந்த பக்கம் நாகை தொகுதியில் மீண்டும் விசிக போட்டியிட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்று விசிக சார்பாக போட்டியிட்ட ஆளூர் ஷா நவாஸ் போட்டியிட்டு, சுமார் 7,200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த முறை ஆளூர் ஷா நவாஸ் தொகுதி மாறப்போவதாக கூறப்படுகிறது.
2021 சட்டசபைத் தேர்தல்
இதனால் நாகை தொகுதியில் போட்டியிட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2021 தேர்தலில் திமுக சார்பாக கெளதமன் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் விசிகவுக்கு தொகுதி கொடுக்கப்பட்டதால், கெளதமன் தரப்பு அதிருப்தி அடைந்தது. இதனால் நாகை தொகுதிக்கு வந்த ஷா நவாஸ்ஸை வரவேற்க கூட கெளதமன் வரவில்லை.
களமிறங்கிய எடிசன்
இருப்பினும் திமுக நிர்வாகி எடிசன் ஷா நவாஸ்க்கு ஆதரவாக இருந்தார். இருந்தாலும் கெளதமன் தொடர்பாக திருமாவளவனிடம் ஷா நவாஸ் கூறிய பின், அது ஸ்டாலின் காதுகளுக்கு சென்றிருக்கிறது. இதன்பின் ஸ்டாலின் தலையிட்டதால், உடனடியாக தேர்தல் பணிகளில் திமுக இறங்கி இருக்கிறது. கெளதமனும் ஷா நவாஸ்க்கு உதவியாக களத்தில் இருக்கிறார். இதனால் ஷா நவாஸ் அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார்.
வாக்கை காப்பாற்றிய ஸ்டாலின்
ஆட்சிக்கு வந்த கெளதமனுக்கு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது. இதனால் கெளதமன் உற்சாகம் அடைந்தார். அண்மையில் இவரின் மகன் திருமணம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இருப்பினும் இந்த முறை திமுக தலைமை நாகையில் கெளதமன் மற்றும் எடிசன் ஆகிய இருவரில் ஒருவருக்கு சீட் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
யாருக்கு சீட்?
இருவருமே தொகுதியில் பம்பரமாக பணியாற்ற தொடங்கி இருக்கின்றனர். கோஷ்டி பூசல் இருந்தாலும், உதயநிதியுடன் எடிசன் நெருக்கம் காட்டி வருகிறார். அதேபோல் கெளதமன் ஸ்டாலின் வார்த்தையை மீறாதவர் என்ற பார்வை உள்ளது. இதனால் நாகை தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்க வாய்ப்புகள் கூடி இருக்கிறது.
-
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications