தீவிர புயலாக மாறிய மாண்டஸ்..நாகையில் வெளுத்து வாங்கும் கனமழை..பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை
நாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாகை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கீழ் வேளூர், வேளாங்கண்ணி, திருமருகல், கீழையூர், திருக்குவளை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாளைய தினம் நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் 13 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது.புயல் கரையை கடக்கும்போது 65 - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னையில் தென்கிழக்கே 440 கி.மீ. முதல் காரைக்காலில் 350 கி.மீ. தொலைவில் உள்ள மாண்டஸ் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசி கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நாளை காலை வரை தீவிர புயலாகவே நகர்ந்து பிறகு சற்றே வலு குறைந்து புயலாக இரவு கரையை கடக்கும். தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை நள்ளிரவு முதல் மாண்டஸ் புயல் கரையை கடக்கும். டிசம்பர் 10ஆம் தேதியும் வட தமிழ்நாட்டில் மிக பலத்த மழை பெய்யக்கூடும். பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும்.
புயல் கரையை கடக்கும் போது மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில் மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்க வேண்டும். மாண்டஸ் புயல் தீவர புயலாக மாறியுள்ளது. வட தமிழ்நாடு, புதுச்சேரியில் மிக மிக பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிகை விடுத்துள்ளது.
இதனிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக நாகை மாவட்டத்தில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கீழ் வேளூர், வேளாங்கண்ணி, திருமருகல், கீழையூர், திருக்குவளை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை புயல் முன்னெச்சரிக்கை காரணமாக நாளைய தினம் நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications