காதல் திருமணம் செய்த மகள்... மனைவி, குழந்தைகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை - நாகையில் ஷாக்
நாகை அருகே மூத்த மகள் காதல் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதால் விரக்தியில் மனைவி, மகளை கொன்று விட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம்: ஒரு காதல் திருமணம் குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது. மகள் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக அவமானம் தாங்காமல் தனது மனைவி குழந்தைகளை கொலை செய்து விட்டு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் தந்தை. இந்த சம்பவம் நாகை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தையே கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்ட நபரின் பெயர் லட்சுமணன். நாகை மாவட்டம் சிக்கலை அடுத்த புதுச்சேரி கிராமத்தில் உணவகம் நடத்தி வந்தார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவியும் தனலட்சுமி, வினோதினி, அட்சயா ஆகிய மூன்று பெண் குழந்தைகள் இருந்தனர்.
மூத்த மகள் தனலட்சுமி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் அதிக மன உளைச்சலில் இருந்தார். தனது உணவகத்தை கூட திறக்காமல் இருந்துள்ளார். நாளுக்கு நாள் லட்சுமணனின் வேதனை அதிகரித்தது.

கொலை செய்த லட்சுமணன்
மன உளைச்சலில் இருந்த லட்சுமணன் யாருமே எதிர்பாராத முடிவை எடுத்தார். நேற்று நள்ளிரவு மனைவி புவனேஸ்வரி மற்றும் மகள் வினோதினி அக்ஷயா ஆகியோர் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார். துடிக்க துடிக்க குடும்பத்தினரை கொன்று விட்ட தானும் உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்தார்.

தூக்கிட்டு தற்கொலை
ரத்த வெள்ளத்தில் குடும்பத்தினர் உயிரிழந்த நிலையில் இருக்க, அதைப்பார்த்த லட்சுமணன் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் நீண்ட நேரமாகியும் வீடு திறக்கப்படாத நிலையில் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்காமல் போகவே காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

போலீஸ் விசாரணை
புகாரின் பேரில் காவல்துறையினர் வந்து வீட்டை சோதனை செய்ததில் 4 பேரும் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஜவஹர் நேரில் விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பறிபோன 4 உயிர்கள்
நான்கு பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு பெண்ணின் காதல் திருமணம் குடும்பத்தையே காவு வாங்கியுள்ளது. அக்கம் பக்கத்தினரின் பேச்சுக்கு பயந்து மூன்று பேரை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் லட்சுமணன்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications