நாகப்பட்டினம் தொகுதி: இதுவே நிஜ சரித்திரமாக போகுது! 8-வது முறையாக வெல்லுமா இந்திய கம்யூனிஸ்ட் கட்சி?
நாகப்பட்டினம்: திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாக்கு வங்கி அதிகமாக இருக்கும் நாகப்பட்டினம் தொகுதியில் களம் காணும் இடதுசாரிகளின் பாய்ச்சலைத் தடுக்க அதிமுக போராடுகிறது.
நாகப்பட்டினம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, (தனி), கீழ்வேளூர் (தனி). தமிழ்நாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 7 முறை வென்ற தொகுதி இது. திமுக 4 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் 3 முறையும் அதிமுக 2 முறையும் வென்றுள்ளன.

நாகப்பட்டினம் லோக்சபா தொகுதி மொத்த வாக்காளர்கள்: 13,38,459; ஆண்கள்- 6,54,850; பெண்கள்- 6,83,528; 3-ம் பாலினத்தவர்-81
2009-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ஏ. கே. எஸ். விஜயன்(திமுக) 3,69,915
ம. செல்வராஜ்(இந்திய கம்யூனிஸ்ட்) 3,21,953
எம். முத்துக்குமார்(தேமுதிக) 51,376
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
கே. கோபால்(அதிமுக) 4,34,174
ஏ. கே. எஸ். விஜயன் திமுக(3,28,095)
வடிவேல் இராவணன்(பாமக) 43,506
செந்தில் பாண்டியன்(காங்கிரஸ்) 23,967
2019-ம் ஆண்டு தேர்தல் முடிவுகள்
ம. செல்வராஜ்(இந்திய கம்யூனிஸ்ட்) 5,22,892
சரவணன்(அதிமுக) 3,11,539
செங்கொடி (அமமுக) 70,307
மாலதி(நாம் தமிழர் கட்சி) 51,448
குருவய்யா (மக்கள் நீதி மய்யம்) 14,503
2024-ம் ஆண்டு களத்தில்..
செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட்)
சர்ஜித் சங்கர் (அதிமுக)
ரமேஷ் (பாஜக)
கார்த்திகா (நாம் தமிழர் கட்சி)
நாகப்பட்டினம் தொகுதி நிலவரம் என்ன? மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளையை உள்ளடக்கிய தொகுதி இது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்த செல்வாக்கு உள்ள தொகுதி. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறும் காலங்களில் 50%-க்கும் அதிகமான வாக்குகள் பெற்றுள்ளன என்பது வரலாறு. இத்தொகுதியில் பாமகவுக்கு சற்று வாக்கு சதவீதம் உள்ளது. இஸ்லாமியர்களும் கணிசமான வாக்காளர்களாக உள்ளனர். பாஜக, நாம் தமிழர் கட்சிகள் வாக்கு வங்கியை உருவாக்கி தக்க வைக்க போராடுகின்றன. கடலும் காவிரி டெல்டாவும் இணைந்த தொகுதி இது. விவசாயக் கூலித் தொழிலாளர்களை அதிகம் கொண்டது. காவிரி நதிநீர், மீனவர் பிரச்சனைகள் பிரதான பேசு பொருளாக இத்தொகுதியில் இருக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications