நாகப்பட்டினம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இலங்கை கடற்படை அட்டூழியம்.. நடுக்கடலில்.. தமிழ்நாடு மீனவர்கள் மீது கற்களை வீசி சரமாரி தாக்குதல்!

Google Oneindia Tamil News

நாகப்பட்டினம்: தமிழ்நாடு மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையால் இன்று கைது செய்யப்பட்டனர்.

இந்திய பெருங்கடலில் மீண்டும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. இலங்கை கடற்படையினர் இந்திய பெருங்கடல் பகுதியில் தமிழ்நாடு மீனவர்களிடம் மீண்டும் அத்துமீற தொடங்கி உள்ளனர்.

இந்திய பெருங்கடலில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். சமீப நாட்களாக இது போன்ற கைது நடவடிக்கைகள் அதிகம் நடைபெற்று வருகின்றன.

Tamilnadu fisherman attacked brutually by Sri Lankan navy after attacking in mid-sea

இந்த நிலையில் இன்று இந்திய பெருங்கக்கடலில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை சரமாரியாக தாக்கினர் . எல்லை கடந்து மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாடு மீனவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் இந்திய பெருங்கக்கடல் எல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு அமைதியாக மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களை கற்கள், கம்புகளை கொண்டு மீனவர்களை சரமாரி அடித்து உள்ளனர். 10க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இதில் சேதம், 12 மீனவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர்.

இதில் மீனவர்களின் நிலை என்ன? அவர்கள் கைது செய்யப்பட்டார்களா. படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை கிழித்து வீசியதாக கூறப்படுகிறது.

இலங்கை கைது செய்யும் தமிழக மீனவர்கள் மீட்புக்கு என்ன நடவடிக்கை? ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில் இலங்கை கைது செய்யும் தமிழக மீனவர்கள் மீட்புக்கு என்ன நடவடிக்கை? ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில்

தமிழக மீனவர்கள் இந்தியர்கள் என்றாலும்.. இவர்களுக்கு உதவியாக இந்திய கடற்படையோ, மத்திய அரசோ இதுவரை கண்டன அறிக்கை எதையும் வெளியிடவில்லை. முக்கியமாக கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும், அவர்களின் படகுகளை திரும்பி தர மறுப்பதும் அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசும் இதில் பெரிதாக நடவடிக்கை எதையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.

சமீபத்தில் கூட சில வாரங்களுக்கு முன் நாகை மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு படகில் சென்ற 8 மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டனர்.

பல்வேறு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு படகு எல்லை தாண்டியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இவர்கள் அங்கே மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது, வந்த கடற்படை அதிகாரிகள், எல்லை மீறி நீங்கள் மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறி இவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு இவர்களின் வலைகளை அங்கேயே மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்கதையாகி வருகிறது. இது போன்ற தொடர் சம்பவங்களுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது போன்ற மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களின் படகுகள் திருப்பி தரப்படுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu fisherman attacked brutually by Sri Lankan navy after attacking in mid-sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X