வேளாங்கண்ணி லாட்ஜில் கேட்ட அலறல் சத்தம்.. யார் இந்த 2 பெண்கள்? கேரள இளைஞர்களால் நடுங்கிய நாகை

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த கேரள இளைஞர்கள் 2 பேர் இப்போது போலீசில் சிக்கியுள்ளனர். புதுக்கோட்டையில் இருந்து வந்த 2 சிறுமிகளுடன் அறிமுகமான இவர்கள், அடுத்தடுத்து செய்த காரியங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவிலிருந்து வேளாங்கண்ணிக்கு டூர் வந்த இடத்தில் இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. கைதானவர்களிடம் விசாரணையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது..!!

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள், அங்குள்ள மேல்நிலைப் பள்ளியில், 8 ம் வகுப்பு படித்து வந்தனர். இதில் ஒரு சிறுமியை அவரது பெற்றோர், திருச்சி அழைத்து சென்று அங்குள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்..

Nagapattinam Velankanni POCSO Case

புதுக்கோட்டை சிறுமிகள்

ஆனால், அந்த பள்ளியில் படிக்க விரும்பாத சிறுமி, புதுக்கோட்டை வந்து தன்னுடன் படித்த இன்னொரு சிறுமியுடன் புறப்பட்டு, கடந்த 20 ம் தேதி வேளாங்கண்ணி வந்திருக்கிறார்.. பெற்றோர் மீது கோபத்தில் இருந்ததால் அவர்களுக்கு தெரியாமலேயே வீட்டை விட்டு வெளியேறி வந்துவிட்டார்கள்.. வேளாங்கண்ணிக்கு வந்த சிறுமிகள் பல்வேறு இடங்களில் வேலை கேட்டிருக்கிறார்கள்.

இதனிடையே, கேரளாவிலிருந்து 15 பேர் கொண்ட குழுவினர் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அந்த குழுவில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அஜய் ஆண்டனி (27), விஷால் (23) ஆகிய 2 இளைஞர்களும் இருந்துள்ளனர்.

குளித்து விளையாடிய சிறுமிகள்

வேளாங்கண்ணி கடற்கரையில் 2 சிறுமிகளும் தனியாக நின்று நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருந்ததை அஜய், விஷால் இருவரும் கவனித்து கொண்டிருந்தனர்.. சிறிது நேரத்தில் சிறுமிகள் இருவரும் வேளாங்கண்ணி கடற்கரையில் குளித்து விளையாடினார்கள்.. இரவு நேரமாகி விட்டதால், சிறுமிகளுக்கு பசி ஏற்பட்டுள்ளது. சாப்பிடுவதற்கு கையில் காசும் இல்லை.. இதனால் கடற்கரையில் நின்றவர்களிடம் சாப்பாடு வாங்கி தரும்படி கேட்டிருக்கிறார்கள்.. சிலரிடம் சென்று வேலையும் கேட்டுள்ளதாக தெரிகிறது.

இதையெல்லாம் பீச்சில் கவனித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள், மெல்ல பேச்சுக் கொடுத்துள்ளனர். அப்போதுதான், வீட்டில் இருந்து கோபத்தில் வெளியேறி வந்துவிட்டோம் என்று 2 சிறுமிகளும் சொல்லி உள்ளனர்..

லாட்ஜில் சிக்கிய 2 இளைஞர்கள்

இதையடுத்து, அவர்களுக்கு சாப்பாடு வாங்கி தருவதாக சொல்லி கடற்கரையில் உள்ள லாட்ஜ் ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு 2 சிறுமிகளுக்கும் சாப்பாடு வாங்கிக்கொடுத்துள்ளனர். அதன் பின்னர் 2 சிறுமிகளையும் இரவு முழுவதும் பலாத்காரம் செய்துள்ளதாக தெரிகிறது. இரவு நேரத்தில் சிறுமிகள் இருவரும் பயத்தில் அலறி சத்தம் போட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பக்கத்து ரூம்களில் தங்கியிருந்தவர்கள் உடனடியாக விரைந்து வந்து, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த போலீசார் சிறுமிகள் இருவரையும் மீட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, சிறுமிகள் நாகப்பட்டினத்தில் உள்ள அன்னை சத்யா குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

போக்சோவில் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அஜய் ஆண்டனி, விஷால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த குழுவில் இருந்த 2 இளைஞர்கள், சிறுமிகள் தொடர்பான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதேநேரம், சிறுமிகளின் பாதுகாப்பிலும், அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்தும் பெற்றோர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியமாகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+