நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பப்பம்மை போடச் சொன்னது தாமரை.. ஹேமலதா போட்டது கை.. குமரியில் வெடித்த போராட்டம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    வாக்களிக்க சொன்னது பாஜகவுக்கு.. ஒட்டு போட்டது காங்கிரசுக்கு... குமரியில் போராட்டம் - வீடியோ

    நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடி வாக்குச் சாவடியில் பாட்டி சொன்ன சின்னத்திற்கு வாக்களிக்காமல் வேறு சின்னத்திற்கு தேர்தல் அலுவலர் வாக்களித்ததாக கூறி பாஜகவினர் பெரும் போராட்டத்தில் குதித்தனர்.

    கன்னியாகுமரி அருகே சந்தையடி அரசு தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 271ல் ஹேமலதா என்ற தேர்தல் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் தலைமையில் தேர்தல் நடைபெற்றது. மாலையில் அந்த பகுதியைச் சேர்ந்த கண் தெரியாத பப்பம்மை என்ற மூதாட்டி தன் மகனுடன் ஓட்டு போட வந்தார்.

    BJP protest against Electoral officer in Kanyakumari

    அப்போது அங்கு நின்ற தலைமை அலுவலர் ஹேமலதா மூதாட்டிக்கு தான் ஓட்டு போட உதவி செய்வதாக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பப்பம்மை தாமரை சின்னத்திற்கு வாக்கு போட சொன்னதாகவும் ஆனால் தலைமை அலுவலர் கை சின்னத்தில் ஓட்டு போட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து அந்த வாக்குச்சாவடியில் மறுதேர்தல் நடத்த கோரி 200க்கும் மேற்பட்ட பாஜகவினர் மற்றும் ஆதிமுகவினர் அங்கு கூடி வாக்கு இயந்திரத்தை அங்கிருந்து கொண்டு செல்லவிடாமல் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்எனக்கு ஒரு நியாயம், சிவகார்த்திகேயனுக்கு ஒரு நியாயமா.. இரவிலும் நீடித்த தேன்மொழியின் நியாய போராட்டம்

    இதுகுறித்து தகவல் அறிந்த கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலிசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அதன் பின்னர் போராட்டக்காரர்கள் அலுவலர் மீது நடத்தக் கோரியும் மறுதேர்தல் நடத்தக் கோரியும் மண்டல தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு ஒன்றை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த பஸ் போராட்டத்தால் சுமார் 3 மணி நேரமாக இந்த பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

    English summary
    Number of cadres from BJP protested against Electoral officer in Kanyakumari for misusing her power.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X