கடன் தொல்லை.. மனைவி, இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை.. நாகர்கோவிலில் அதிர்ச்சி
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஒரே குடும்பத்தில் நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள சுண்டபட்டிவிளையை சேர்ந்தவர் கண்ணன் (43). மர கடைசல் (கார்பெண்டர்) தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (37).

இவர்களுக்கு அனுஷ்கா (10) என்ற பெண் குழந்தையும் விகாஸ் (4) என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில் விகாசுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் பெருமளவு பணம் மருத்துவத்திற்காக செலவழிந்து கண்ணன் கடனாளி ஆனதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்ததால் விரக்தி அடைந்த கண்ணன் தனது மனைவி சரஸ்வதி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனுக்காக 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications