திமுக பேசுவதைக் கேட்டால் சிரிப்பா வருது.. ஓ.எஸ். மணியன் நக்கல்
நாகர்கோவில்: அநாகரிக அரசியலுக்கு சொந்தக்காரரான திமுக, அநாகரிக அரசியல் நடப்பதாக கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது. மு.க ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி வாக்குகளை பறித்தார், மக்களுக்கு தெரிந்து விட்டது, இப்போது அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை என கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஒ. எஸ் மணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அஇஅதிமுக வின் 48 ஆவது ஆண்டு துவக்க தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு தமிழக கைத்தறித்துறை அமைச்சர் மாண்புமிகு ஓ.எஸ்.மணியன், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி மாண்புமிகு தளவாய் சுந்தரம் தலைமையில் அதிமுகவினர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பெரிய ராசிங்கன் தெருவில் அமைந்துள்ள விரிவாக்கம் செய்யப்பட்ட தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க காட்சியரையை திறந்து வைத்த அமைச்சர் ஓ.எஸ் மணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், அதிமுக தொடங்கப்பட்டு 48 ஆண்டுகள் ஆகின்றன இன்றும் எம்ஜிஆர் மற்றும் அம்மாவின் வழிகாட்டுதல் மற்றும் கொள்கை படி அதிமுக இப்போதும் செயல்பட்டு வருகிறது. கருத்துக்கணிப்பு என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது. 2 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெறும்.
கைத்தறி துணிகள் மக்கள் வரவேற்பு கொடுக்கும் துணிகள், கைத்தறி தொழில் நலிவடைய, கைத்தறி துணிகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. தற்போது 270 கோடியாக இருந்து வரும் கைத்தறி விற்பனை ஆண்டுக்கு 300 கோடியாக உயர்த்தப்படும்.
மு.க ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி வாக்குகளை பறித்தார். மக்களுக்கு தெரிந்து விட்டது. இப்போது அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை.
சீமானை பொறுத்தவரை வாய்க்கு வந்ததை பேசும் மனிதர். இதற்கு முன்பும் பல்வேறு கருத்துக்களை முரட்டுத்தனமாக சீமான் கூறி உள்ளார். அநாகரிக அரசியலுக்கு சொந்தக்காரர்களான திமுக தமிழகத்தில் அநாகரிக அரசியல் நடப்பதாக கூறுவது நகைப்பை ஏற்படுத்துகிறது என தெரிவித்தார்.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி?












Click it and Unblock the Notifications